முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் பயங்கர தீ விபத்து 1500 குடிசைகள் எரிந்து சாமபல்

ஞாயிற்றுக்கிழமை, 6 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை,மார்ச்.- 6 - மும்பையில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆயிரத்து 500 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். மும்பையில் பாந்த்ரா ரயில்வே நிலையத்திற்கு அருகே பெர்பதா பகுதி உள்ளது. இந்த பகுதியில் குடிசைகள் அதிகம். இந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தீ மலமலவென்று எரிந்து பரவியதில் ஆயிரத்து 500 குடிசைகள் எரிந்து சாம்பலாகின என்று போலீசார் தெரிவித்தனர். பெரம்பதா பகுதியில் உள்ள கரீம் நகர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு சுமார் 8.15 மணி அளவில் தீப்பிடித்தது. இதனையொட்டி அந்த பகுதியில் இருக்கும் துறைமுக ரயில் சர்வீஸ்கள் நேற்று இரவு 9 மணி முதல் நிறுத்தப்பட்டன. 

தகவல் தெரிந்ததும் தீயணைப்பு துறையினர் 30 தீயணைப்பு வண்டிகள் மற்றும் 10 தண்ணீர் லாரிகளுடன் வந்து நேற்றுமுன்தினம் இரவு 12 மணி நேரம் வரை போராடி தீயை அணைத்தனர். குடிசைகளில் பல மரத்தால் இருந்ததால் தீ வேகமாக பரவியது. மேலும் வீடுகளில் இருந்த கியாஸ் சிலிண்டர்களும் வெடித்தன. அவைகள் வெடிக்கும்போது பயங்கர சத்தம் கேட்டது. இந்த தீ விபத்தில் தீயணைப்பு படையினர் 2 பேர் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பாபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எரிந்த வீடுகளில் சிலம்டாக் மில்லினரி படத்தில் நடித்த 12 வயது சிறுமி ரூபினா அலி வீடும் அடங்கும். அதுமட்டுமல்லாது அவர் வாங்கிய ஆஸ்கர் விருதும் தீயில் எரிந்துவிட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago