முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் விநாயகர் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு :- கண்காணிப்பு

வெள்ளிக்கிழமை, 2 செப்டம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, செப். - 2 - சென்னையில் விநாயகர் சிலைகளுக்கு  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 3000 இடங்களில் கண்காணிப்பு  பணிகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்த விபரம் வருமாறு: விநயாகர் சதுர்த்தி விழா நேற்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண் டாடப்பட்டது. சென்னையில் பண்டிகையை கொண்டாடும் விதமாக நகரின் பல இடங்களில் விநாயகர் சிலைகள் வழிபாட்டிற்காக அமைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு பகுதியின் முக்கிய வீதிகளில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் வழிபாடு செய்தனர். பல்வேறு இந்து அமைப்பின் சார்பில் விநாயகர் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பொது மக்கள் தேங்காய் ​ பழம் வைத்து சாமி கும்பிட்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3000-​க்கும் மேற்பட்ட இடங்களில் சிறு சிறு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. எழும்nullர், புரசைவாக்கம், ஓட்டேரி, பெரம்nullர், திரு.வி.க. நகர், கொளத்தூர், அயனாவரம், வில்லிவாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, கோயம்பேடு, வளசரவாக்கம், பல்லாவரம், கிண்டி, தாம்பரம், திருவான்மியூர், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடந்தன. ஒரு சில இடங்களில் போலீஸ் அனுமதி பெறாமலும் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
விநாயகர் சிலைகள் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நேற்று முதல் இரவு​பகலாக தீவிர கண் காணிப்பில் ஈடுபடுகிறார்கள். விநாயகர் சிலைகள் வருகிற 3, 4, 5​-ந்தேதிகள் மற்றும் 11-​ந்தேதி அன்று ஊர்வலம் நடைபெறுகிறது. ஒவ்வொரு இந்து அமைப்பினரும் வெவ்வேறு நாளில் விநாயகர் ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளனர். விநாயகர் சிலைகள் வழிபாட்டு இடங்களில் யாராவது இடையூறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதனால் நகரில் அனைத்து பகுதியிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். விநாயகர் சிலைகள் 6 இடங்களில் கரைக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை, பின்புறமுள்ள கடற்கரை, நீnullலாங்கரை பல்கலைநகர் கடற்கரை, எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடற்கரை பகுதிகளில் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி நகரின் பல இடங்களில் களிமண் விநாயகர் சிலைகள் விற்கப்பட்டன. சாலையோரம் கடை வைத்து பல்வேறு வண்ணங்களில் சிலைகள் விற்பனை நடந்தது. விநாயகர் சிலைகளை பெண்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்