முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி ரஷ்ய வீராங்கனை ஷரபோவா வெற்றி

வெள்ளிக்கிழமை, 2 செப்டம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க், செப். - 2  - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் 2 - வது சுற்றில் ரஷ்ய முன்னணி வீராங்கனை மரியா ஷரபோவா வெ ற்றி பெற்றார். இந்திய வீரர் சோம்தேவ் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.  இந்த வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி முக்கிய நகரமான நியூயார்க்கில் கடந்த ஒரு வார காலமாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீர ர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித்துள்ளனர். இதற்காக அவ ர்கள் தீவிரப் பயிற்சியுடன் வந்து உள்ளனர். கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வரும் இந்தப் போட்டி தற் போது காலிறுதியை நோக்கி முன்னேறி வருகிறது. விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் இந்தப் போட்டியை ரசிகர்கள் ஆர்வமாக கண்டு களித்து வருகின்றனர். மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் 2 - வது சுற்று ஆட்டம் ஒன்று நடந்த து. இதில் ரஷ்ய முன்னணி வீராங்கனையான மரியா ஷரபோவாவும், பெலாரஸ் வீராங்கனை அனாஸ்டாசியா யகிமோவாவும் மோதினர்.  இதில் விம்பிள்டன் முன்னாள் சாம்பியனான மரியா வெகு நேர்த்தி யாக ஆடி, 6 - 1, 6 - 1 என்ற நேர் செட் கணக்கில், பெலாரஸ் வீராங்க னையை தோற்கடித்து 3 - வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு 2- வது சுற்று ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் வீராங்கனை பார் டோலியும், அமெரிக்க வீராங்கனை கிறிஸ்டினா மெக்ஹலும் மோதி னர். இதில் 8 -ம் நிலை வீராங்கனையான பார்டோலி 7 - 6 (2), 6 - 2 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனையிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
அமெரிக்காவின் மற்றொரு முன்னணி வீராங்கனையான வீனஸ் வில் லியம்சும், ஜெர்மனி வீராங்கனை லிசிக்கியும் மற்றொரு ஆட்டத்தில் மோதுவதாக இருந்தது.
ஆனால் வீனஸ் கடைசி நேரத்தில் இடுப்பு மற்றும் வயிற்றுவலி கார ணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் ஜெர்மனி வீராங் கனை லிசிக்கி பை மூலம் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தாவினார்.
ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் இளம் வீரரான சோம்தேவ் வர்மன், இங்கிலாந்தின் முன்னணி வீரரான ஆன் டி முர்ரேவுடன் மோதினார். முதல் செட்டில் வர்மன், முர்ரேவுக்கு கடும் சவால் கொடுத்தார்.
ஆன்டி முர்ரே போராடி 7 - 6(2) என்ற செட் கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். பின்பு நடந்த 2 செட்டுகளில் வர்மனின் ஆட்டம் முர் ரேவிடம் எடுபடவில்லை. இங்கிலாந்து வீரர் முர்ரே தனது அனுபவத் திறமையை வெளிப்படுத்தி வென்றார்.
இறுதியில் அவர் 7 - 6(5), 6 - 2, 6 - 3 என்ற செட் கணக்கில் வெற்றி பெ ற்று 2 -வது சுற்றுக்கு முன்னேறினார். தவிர, ஆன்டி ரோடிக், மார்டின் டெல்பெட்ரோ ஆகியோரும் 2 -வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago