முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி - 20 கிரிக்கெட் போட்டி மோர்கன் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அபாரவெற்றி

வெள்ளிக்கிழமை, 2 செப்டம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

மான்செஸ்டர், செப். - 2  - இந்திய அணிக்கு எதிராக மான்செஸ்டரில் நடந்த ஒரே ஒரு 20 -க்கு 20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தி ல் அபார வெற்றி பெற்று இந்தத் தொடரை 1 - 0 என்ற கணக்கில் வெ ன்றது.  இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தரப்பில், மார்கன் அதிரடியா க ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். பீட்டர்ச ன், பொபாரா மற்றும் படேல் ஆகியோர் அவருக்கு பக்கபலமாக ஆடினர். முன்னதாக பெளலிங்கின் போது, டெர்ன்பேச் மின்னல் வேகத்தில் பந்து வீசி 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிராட், ஸ்வா ன், பொபாரா மற்றும் பிரஸ்னன் ஆகியோர் அவருக்கு ஆதரவாக பந்து வீசினர். இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு இடையே திட்டமிடப்பட்ட ஒரே ஒரு டி - 20 போட்டி மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிரா போர்டு மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. இரு அணிகளுக்கு இடையே நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி சார்பில், ரகானே மற்றும் டிராவிட் ஆகியோரும், இங்கிலாந்து அணி தரப்பில், பட்லர் மற்றும் ஹேல்ஸ் ஆகியோர் அறிமுக வீரர்களாக களம் இறங்கினர். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 19.4 ஓவ ரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 165 ரன்னை எடுத்தது. இந்திய அணி சார்பில், ஒரு வீரர் அரை சதமும், 2 வீரர்கள் கால் சதமும் அடித்தனர். அறிமுக வீரராகவும், துவக்க வீரராகவும் இறங்கிய ரகானே அபார மாக ஆடி, 39 பந்தில் 61 ரன்னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி அடக்க ம். இறுதியில் அவர் பிராட் வீசிய  பந்தில் டெர்ன்பேச்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
மூத்த வீரரான டிராவிட் 21 பந்தில் 31 ரன்னை எடுத்தார். இதில் 3 ஹா  ட்ரிக் சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் பொபாரா வீசிய பந்தில் மார் கனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சுரேஷ் ரெய்னா 19 பந்தி ல் 33 ரன்னை விளாசினார். இதில் 2 பவுண்டரியும், 3 சிக்சரும் அடக் கம்.
இங்கிலாந்து அணி தரப்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான டெர்ன்பேச் 22 ரன்னைக் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டைக் கைப்பற் றினார். பிராட் 37 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, ஸ்வான், பொபாரா மற்றும் பிரஸ்னன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இங்கிலாந்து அணி 166 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை இந்திய அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்னை எடுத்தது.
இதனால் இங்கிலாந்து அணி இந்த டி - 20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 1 - 0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இங்கிலாந்து அணி சார்பில், மார்கன் அதிகபட்சமாக 27 பந்தில் 49 ரன் னை எடுத்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். பீட்டர்ச ன் 23 பந்தில் 33 ரன்னை எடுத்தார். தவிர, பொபாரா 36 பந்தில் 31 ரன் னையும், ஆர். படேல் 16 பந்தில் 25 ரன்னையும், கீஸ்வெட்டர் 13 பந்தி ல் 18 ரன்னையும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான முனாப் படேல் 25 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பிரவீன் குமார் மற்றும் கோக்லி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இ ந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக டெர்ன்பேச் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்