முக்கிய செய்திகள்

செபி வாரிய அதிகாரிகளுடன் நிதி அமைச்சர் பிரணாப் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 6 மார்ச் 2011      அரசியல்
Pranab-Mukherjee 1

புதுடெல்லி,மார்ச்.- 6 - இந்திய பங்குசந்தை வாரிய தலைவர் யு.கே. சின்ஹா மற்றும் அதிகாரிகளுடன் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று சந்தித்து பேசினார். அப்போது சந்தை நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறை குறித்து ஆய்வு செய்தனர். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் செபி தலைவர் மற்றும் அதிகாரிகளையும் நிதி அமைச்சராக இருப்பவர் சந்தித்து பேசுவது மரபு. அதேமாதிரி கடந்த 28-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். அதனையொட்டி அவர் நேற்று புதுடெல்லியில் செபி அதிகாரிகளை சந்தித்து பங்கு சந்தை நடவடிக்கைகள் நிலவரம் குறித்து ஆய்வு செய்ததோடு விபரங்களையும் கேட்டறிந்தார். 

கூட்டத்தில் செபி நடவடிக்கைகள் குறித்து முகர்ஜியிடம் சின்ஹா விபரமாக எடுத்துரைத்தர். செபியில் பல முன்னேற்றமான நடவடிக்கைகள் நடந்து வருகிறது என்று பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முகர்ஜி கூறினார். முதலீட்டாளர்களுக்கு பட்ஜெட் சாதகமாக இருந்தால் பங்குசந்தையில் நேரடி முதலீடு அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பட்ஜெட்டிற்கு பிறகு பங்கு சந்தைகளில் ஏற்றம் கண்டு வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: