முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆலப்புழையில் கார் விபத்து: பிரபல நடிகர் மம்முட்டி தப்பினார்

சனிக்கிழமை, 3 செப்டம்பர் 2011      சினிமா
Image Unavailable

ஆலப்புழை,செப்.- 3 - ஆலப்புழையில் நடந்த கார் விபத்தில் பிரபல நடிகர் மம்முட்டி உயிர் தப்பினார்.  மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி ஆலப்புழை அருகே தனது காரில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த தனியார் பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் காரின் பின்பகுதி நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக மம்முட்டி உயிர் தப்பினார். மம்முட்டியிடம் கார் டிரைவர் மன்னிப்பு கேட்டதால் போலீசார் வழக்கு பதியாமல் விட்டு விட்டனர்.  வெனிசில் வியாபாரி என்ற படத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி. இப்படத்தின் சூட்டிங் ஆலப்புழையில் நடந்து வருகிறது. சூட்டிங்கை முடித்து வீட்டுக்கு கிளம்பினார் மம்முட்டி. எர்ணாகுளத்தில் அவரது கார் சென்று கொண்டிருந்த போது அரூர் கோயில் சந்திப்பு என்ற இடத்தில் கார் மீது பின்னால் வந்த தனியார் பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் காரின் பின்பகுதி அப்பளம் போல் நொறுங்கி போனது. இதை பார்த்த பொதுமக்கள் காரை நோக்கி ஓடி வந்தனர். உள்ளே பார்த்த போது அங்கு மம்முட்டி சிக்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவருக்கு காயமேதும் ஏற்படவில்லை. பின்னர் போலீசார் விரைந்து வந்து பஸ்சை காவல் நிலையம் கொண்டு சென்றனர். இந்நிலையில் மம்முட்டியை சந்தித்த பஸ் டிரைவர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதையடுத்து பஸ்சின் டிரைவர் எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்