முக்கிய செய்திகள்

அர்ஜூன்சிங் மறைவுக்கு காங்.காரிய கமிட்டி இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 6 மார்ச் 2011      அரசியல்
Sonia Gandhi 0

 

புதுடெல்லி,மார்ச்.- 6 - காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அர்ஜூன்சிங் மறைவுக்கு கட்சியின் காரிய கமிட்டி இரங்கல் தெரிவித்துள்ளது.காங்கிரஸ் காரிய கமிட்டியின் கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. கூட்டத்தில் காரிய கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து அர்ஜூன்சிங் நீக்கப்பட்டார். அதன் பிறகு சிறிது நேரத்தில் அர்ஜூன்சிங் மரணமடைந்துவிட்டார். 

இந்தநிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி நேற்று சோனியா காந்தி தலைமையில் மீண்டும் கூடி அர்ஜூன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பான இரங்கல் தீர்மானத்தில் அர்ஜூன்சிங்கிற்கு புகழ்மாலை சூட்டப்பட்டுல்ளது. இந்திய அரசியலில் அர்ஜுன்சிங் ஒரு மதசார்பற்ற தலைவராக திகழ்ந்தார். வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக போராடி வந்தார். மலைசாதியினர், தலித், பாமர ஏழைகளின் முன்னேற்றத்திற்கு பெரும் முயற்சிகளை எடுத்து வந்தார் என்று அந்த இரங்கல் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. 

அர்ஜூன்சிங்கின் உடல் அவரது சொந்த நகரான சுரஹத்திற்கு கொண்டு செல்லப்படும். அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் இன்று உடல் தகனம் செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் கட்சியின் பத்திரிகை தொடர்பு பிரிவு தலைவருமான ஜனார்த்தன் சிங் தெரிவித்தார். அர்ஜூன் சிங் இறுதிச்சடங்கில் காங்கிரஸ் தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, மோஷினா கித்வாய் ஆகியோர்கள் கலந்துகொள்கிறார்கள். முன்னதாக நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்: