முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனியில் பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று ஆற்றில்கரைத்தனர்

சனிக்கிழமை, 3 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

தேனி,செப்.- 3 - தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளில் உள்ள பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர்.வழிபட்ட பக்தர்களுக்கு கொழுக்கட்டையும்,சுண்டல் போன்ற பிரசாதங்கள் வழங்கினார்கள்.2-ஆம் நாள் நிகழ்ச்சியாக நேற்று அனைத்து இடங்களிலும் வைத்திருந்த சிலைகளை ஒன்று சேர்த்து ஆற்றில் கரைப்பதற்காக பொம்மையகவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று அல்லிநகரம்,தேனி,நேருசிலை ,பங்களாமேடு வழியாக அரண்மனைபுதூர் அருகே உள்ள முல்லையாற்றில் கரைத்தனர்.சிலைகள் கரைப்பதற்கு  முன்பாக ஊர்வலமாக எடுத்து சென்ற பிள்ளையார் சிலைகளை சாலை நெடுகிலும் பக்தர்களும்,பொதுமக்களும் வழிபட்டனர்.ஊர்வலத்தின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீண்குமார் அபினவு ஆலோசனையின் பேரில் சிலை ஊர்வலத்திற்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்