முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்காசியில் அதிமுக ஆலோசணைக் கூட்டம் செந்தூர்பாண்டியன் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

தென்காசி. செப். - 4 - நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசணைக் கூட்டம் தென்காசி சிவா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசணை கூட்டத்திற்கு நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், தமிழக அமைச்சருமான செந்தூர்பாண்டியன் தலைமை தாங்கினார்.  மாநில அதிமுக விவசாய பிரிவு இணைச்செயலாளர் திருச்செங்கோடு கமலநாதன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் துரையப்பா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :- தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு அமோகமாக வாக்களித்து அதிமுக பொதுச்செயலாளரை தமிழக முதல்வராக்கிய தமிழக மக்களுக்கு, வாக்காள பெருமக்களுக்கு கோடான கோடி நன்றியினை காணிக்கையாக்குகிறோம்.
நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் ராஜா.செந்தூர்பாண்டியன் அவர்ளை கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வைத்து எம்.எல்.ஏ. ஆக்கியதோடு தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சராக நியமித்த தமிழக முதல்வருக்கு கோடான கோடி நன்றியினை காணிக்கையாக்குகிறோம். தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்றவும், கடந்த ஆட்சியில் அப்பாவி மக்களிடம் திமுகவினர்கள் அபகரித்த நிலங்களை மீட்டுஉரியவர்களிடம் ஒப்படைத்து வரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்த இலங்கை நாட்டின் மீது உலக வல்லரசு நாடான அமெரிக்கா பொருளாதார தடைவிதிக்க காரணமாக இருந்ததோடு, தமிழகத்தில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்கல்வித்துறையில் மட்டும் 52000 பேர்களை பணி நியமனம் செய்ய ஆணை பிறப்பித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். விரைவில் தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தமிழக முதல்வர் அடையாளம் காட்டும் வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச்செய்ய அனைவரும் அயராது பாடுபடுவோம் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் கே.அண்ணாமலை,
மாவட்ட துணைச்செயலாளர் வி.பி.மூர்த்தி, மாவட்ட பொருளாளர் கே.சண்முகசுந்தரம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் எம்.மாடசாமி பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆர்.எஸ்.கே.துரை,  தொகுதி செயலாளர்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், பொய்கை மாரியப்பன், இணைச்செயலாளர்கள் நன்னை பாலசுப்பிரமணியன், பி.வி.நடராஜன், எல்.ஐ.சி.முருகையா, தென்காசி நகர செயலாளர் முத்துக்குமார், தென்காசி ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ஆய்க்குடி கே.செல்லப்பன், கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டியன், குற்றாலம் செயலாளர் கே.பி.குமார் பாண்டியன்,
பொதுக்குழு உறுப்பினர் ஷமீம், இலஞ்சி காத்தவராயன், நகர ஜெ.பேரவை செயலாளர் ஆர்.முருகன்ராஜ், துப்பாக்கி பாண்டியன், வழக்கறிஞர் கார்த்திக் குமார், அலியார், பண்பொழி பரமசிவன், செங்கோட்டை குருசாமி, மத்தளம்பாறை முருகன், பாட்டப்பத்து ராமர், நகர்மன்ற  உறுப்பினர்கள் வெள்ளப்பாண்டியன், கசமுத்து, கிருஷ்ணமூர்த்தி, மகபூப்மசூது, அச்சன்புதூர் அயூப், பாபுராஜா, முத்துக்குமாரசாமி, கூட்டுறவு மாரிமுத்து, கே.பி.எம்.துரை, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்