முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நண்பர்கள் அன்பு குழு சார்பில் இலவச மருத்துவ முகாம்

திங்கட்கிழமை, 5 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,செப்.- 5 - நண்பர்கள் அன்பு குழு மற்றும் வாஸன் கண்மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் நேற்று மதுரை எல்லீஸ் நகரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் இ.முகம்மது சித்திக் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக சையது சிராஜ், எல்லீஸ் நகர் ஜமாத் தலைவர் நிஜாம் அலிகான் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமில் ஏராளமானோருக்கு கண் மற்றும் பல் தொடர்பான சோதனைகள் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
 மருத்துவ முகாமுக்கான ஏற்பாடுகளை வாஸன் கண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அஜித் சந்திரசேகர் தலைமையில் டாக்டர்கள் செய்திருந்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்