முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலை மிரட்டல்: வீரபாண்டி ஆறுமுகம் - மகன் மீது வழக்கு

செவ்வாய்க்கிழமை, 6 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சேலம் செப்.6​- சேலத்தில் நகைக்கடை அதிபரிடம் நிலம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் ராஜா, தம்பி மகன் பாராப்பட்டி சுரேஷ்குமார் உள்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முன்னாள் ஆர்.டி.ஓ.,தாசில்தார் உள்பட 8 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். கடந்த தி.மு.க.ஆட்சியில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் தி.மு.க.வினர் பல்வேறு நில அபகரிப்பு வழக்கில் ஈடுப்பட்டனர். போலீசில் புகார் கொடுத்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை.தி.மு.க.ஆட்சி காலத்தில் நிலத்தை பறிகொடுத்தவர்களுக்கு அ.தி.மு.க.ஆட்சி அமைந்தால் நிலம் மீட்டு கொடுக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அதன்படி ஆட்சி அமைந்ததும் நில அபகரிப்பு மீட்பு பிரிவு என தனிப்பிரிவை தொடங்கினார். இந்த பிரிவுக்கு வரும்  நில அபகரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்து உரியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிலம் மீட்க்கப்பட்டும் வருகிறது.
சேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு, பிரிமியர் ரோலர் மில் நிலம் அபகரித்து விற்பனை,நிலவாரப்பட்டியில் நிலம் அபகரிக்க தூண்டுதல் என 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 வழக்கில் முன்ஜாமீன் பெற்று இருந்த வீரபாண்டி ஆறுமுகம் போலீசில் சரண்டராகி கையெழுத்திட வரும்போது நிலவாரப்பட்டி நில அபகரிப்பில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள நிலையில் மீண்டும் சேலத்தில் உள்ள பிரபல நகைக்கடை அதிபர் ஒருவரிடம் நிலம் கேட்டு மிரட்டிய வழக்கு அவர் உள்பட 16 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் அங்கம்மாள்காலனி குடியிருந்த 31 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை இரவோடு இரவாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆட்கள் மிரட்டி காலி செய்தனர். அந்த நிலத்தில் அவர் தனது பேத்திக்கு மருத்துவமனை கட்டி தருவதற்காக அந்த நிலம் கையகப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. அந்த நிலம் பெங்களூர் மெயின்ரோட்டில் இருந்து உள்புறமாக உள்ளது. இந்த நிலத்திற்கு செல்ல வேண்டும் என்றாள் டி.வி.எஸ்.அருகே உள்ள லஷ்மி சுவீட்ஸ் அருகில் உள்ள அங்கம்மாள் காலனி ரோட்டில் உள்ளே சென்றுதான்செல்ல முடியும்.பெங்களூர் மெயிரோட்டில் செல்லலாம் என்றால் நேராக சென்றுவிடலாம். ஆனால் அங்கம்மாள் காலனி நிலத்திற்கு ம் மெயின்ரோட்டை இணைக்கும் இடத்தில் சேலத்தைச் சேர்ந்த பிரபல நகைக்கடை அதிபருக்கு சொந்தமான நிலம் ஒன்று இருந்தது. இந்த நிலத்தின் வழியாக சென்றால் மெயின்ரோட்டில் இருந்து எளிதாக அந்த இடத்திற்கு செல்லமுடியும். எனவே அந்த நிலத்தில் வழித்தடம் ஏற்படுத்த நில உரிமையாளரான நகைக்கடை அதிபர் பிரேம்நாத்திடம் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்,மற்றும் அவரது ஆட்கள் வழிதடம் ஏற்படுத்த 2100 சதுரஅடியை குறைந்த விலைக்கு விட்டு கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவர் அந்த நிலம் தனது பரபம்பரை சொத்து எனவும் அதை விற்க முடியாது எனவும் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதையத்து அவருக்கு நிலத்தை கேட்டு வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் ராஜா உள்ளிட்ட 16 பேர் கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த கொலை மிரட்டல் தொடர்பாக அவர் அப்போது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் அதை விசாரிக்கவில்லை.
இந்த நிலையில் பிரேம்நாத்தும், அவரது உறவினர்களும் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது மகன் ராஜா உள்ளிட்ட பலர் தன்னுடைய நிலத்தை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கத்திடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் கொடுத்தனர். இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் வழக்கை விசாரித்த உதவி கமிஷனர் பிச்சை தலைமையில் 4 தனிபடையும், 4 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் நிலம் கேட்டு மிரட்டிய வழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்,  முன்னாள் எம்.எல்.ஏ.வும் அவரது மகனுமான வீரபாண்டி ஆ.ராஜா, வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனும், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவருமான பாராப்பட்டி சுரேஷ்குமார்,சேலம் முன்னாள் உதவி கலெக்டர் பாலகுருமூர்த்தி, சேலம் முன்னாள் தாசில்தார் ஸ்ரீ ரெங்கநாதன்,பத்திர எழுத்தர் நாராயணன்,சேலம் மாநகர தி.மு.க.துணை செயலாளர் அழகாபுரம் முரளி,முன்னாள் இன்ஸ்பெக்டர் லட்சுமணன்,வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் கவுசிகnullபதி,சேகர்,தாதை கார்த்தி, கவுன்சிலர் ஜிம்ராமு,ஜான்,பிரகாஷ், சரவணன்,வழக்கறிஞர் தெய்வலிங்கம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் 147(சட்டவிரோதமாக கூடுதல்), 148(பயங்கர ஆயுதங்களுடன் கூடுதல்), 386(அச்சுறுத்துதல்)307(கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று முன்னாள் உதவி கலெக்டர் பாலகுருமூர்த்தி, முன்னாள் தாசில்தார் ஸ்ரீ ரெங்கநாதன்,வக்கீல் தெய்வலிங்கம்,சேலம் மாநகர துணை செயலாளர் அழகாபுரம் முரளி,பத்திர எழுத்தர் நாராயணன்,ஜான்,பிரகாஷ்,சரவணன் ஆகிய 8 பேரை கைது செய்தனர்.பின்னர் இவர்களை சேலம் குற்றவியல் நடுவர் மன்றம் எண் 4 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நடுவர் இவர்கள் 8 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா,தாதை கார்த்தி,கவுசிகnullபதி, கவுன்சிலர் ஜிம்ராமு உள்பட பலரை தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய வீரபாண்டி ஆறுமுகம்,பாரப்பட்டி சுரேஷ்குமார்,முன்னாள் இன்ஸ்பெக்டர் லட்சுமணன்,சேகர் ஆகியோர் ஏற்கனவே சிறையில் உள்ளனர். தற்போது நிலவாரப்பட்டி நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி தற்போது வீரபாண்டி ஆறுமுகத்திற்கு ஜாமீன் கிடைத்துள்ளது. நேற்று புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் விடுதலையாவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago