முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

செவ்வாய்க்கிழமை, 6 செப்டம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

செளத்தாம்டன், செப். 6 - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 -வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செளத்தாம்டனில் இன்று நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெற இந்திய அணி வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்று ப் பயணம் செய்து கேப்டன் ஸ்ட்ராஸ் தலைமையிலான அணிக்கு எதி ரான டெஸ்ட் தொடரில் முதலில் விளையாடியது.
முன்னதாக இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி 4 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி ஒயிட் வா ஷ் ஆனது.
இதற்கு அடுத்தபடியாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒரே ஒரு 20 -க்கு 20 போட்டி நடைபெற்றது. இதிலும் இங்கி லாந்து அணியே வெற்றி பெற்றது. இது இந்திய அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
அடுத்ததாக இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இதன் முதல் போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட் நகரில் 3 -ம் தேதி நடந்தது. ஆனால் இது மழையால் பாதிக்கப் பட்டு கைவிடப்பட்டது.
இந்நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே யயான 2 -வது ஒரு நாள் போட்டி செளத்தாம்டன் நகரில் இன்று நடக் க இருக்கிறது. இதில் வெற்றி பெற இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற் சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது. பின்பு நடந்த ஒரே ஒரு டி- 20 போட்டியிலும் தோற்றது. எனவே ஒரு நாள் தொடரில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால் இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் இந்திய முன்னணி வீரர் கள் பலர் காயம் அடைந்துள்ளது அணிக்கு பின்னடைவ அளித்துள்ள து. ஏற்கனவே 6 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.  
முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக இறங்கிய பார்த்திவ் படேல் மற்றும் அறிமுக வீரர் ரகானே இருவரும் அணிக்கு நல்ல துவக்கத்தை அளித்தனர். இது இந்திய அணிக்கு உற்சாக த்தை அளித்துள்ளது. தவிர, கோக்லியும் அரை சதம் அடித்தார்.
கடந்த போட்டியின் போது, மிடில் ஆர்டர் வீரரான ரோகித் சர்மா கை விரலில் காயம் அடைந்தார். எனவே அவர் மீதமுள்ள 4 போட்டிகளில் ஆடமாட்டார். நட்சத்திர வீரரான டெண்டுல்கரின் கால் விரலில் காய ம் ஏற்பட்டுள்ளது.
சச்சின், இது தொடர்பாக எலும்பு வைத்திய நிபுணரை சந்திக்க இருக்கிறார். இதனால் அவர் முதல் ஒரு நாள் போட்டியில் ஆடவில்லை. இன் று நடக்க இருக்கும் 2-வது போட்டியிலும் ஆடுவாரா என்பது தெரிய வில்லை.
காயம் அடைந்துள்ள மிடில் ஆர்டர் வீரர் ரோகித் சர்மாவுக்கு பதிலாக பெங்கால் வீரர் மனோஜ் திவாரி அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறா ர். ஆனால் அவர் 2 -வது போட்டியில் இறக்கப்படுவாரா என்பது இன் னும் முடிவாகவில்லை.
முன்னணி வீரர்களின் காயத்தால் இந்திய அணி பலவீனம் அடைந்துள் ளதால், அணியை பலப்படுத்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை அணியில் சேர்ப்பது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது.
முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கும் சிறப் பாக இருந்தது. பெளலிங்கும் நன்றாக இருந்தது. முக்கியமாக வேகப் பந்து வீச்சாளர் பிரவீன் குமார் தனது அபாரமான சுவிங் பந்துகளால் இங்கிலாந்து வீரர்களை திணற வைத்து வருகிறார்.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை பேட்டிங், பெளலிங் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது.
இந்த 2 -வது போட்டியில் வெற்றி பெற இரு அணி வீரர்களும் ஆக் ரோசமாக ஆடுவார்கள். எனவே இந்தப் போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் போட்டி மா லை 6.30 மணிக்கு துவங்குகிறது. தூர்தர்ஷன், ஸ்டார் கிரிக்கெட் சேனலில் போட்டி நேரடி ஒளிபரப்பாகிறது.
இந்திய அணி : - தோனி (கேப்டன்), டெண்டுல்கர், பார்த்திவ் படேல், ரகானே, டிராவிட், விராட் கோக்லி, ரெய்னா, மனோஜ் திவாரி, பிர வீன் குமார், வினய் குமார், முனாப் படேல், ஆர். பி. சிங், அஸ்வின், அமித் மிஸ்ரா, ரவீந்திர ஜடேஜா மற்றும் வருண் ஆரோன் ஆகியோர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்