முக்கிய செய்திகள்

பி.ஜே. தாமஸ் விவகாரம்:ஒப்புக் கொண்டார் பிரதமர்

ஞாயிற்றுக்கிழமை, 6 மார்ச் 2011      அரசியல்
ManmohanSingh 5

 

ஜம்மு,மார்ச் - .6 - மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்ட விவகாரத்துக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். மேலும் நாட்டுக்கு உண்மையான விசுவாசி என்ற முறையில் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.  பி.ஜே. தாமஸ் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டது செல்லாது என சுப்ரீம் கோர்ட் அறிவித்ததை அடுத்து பிரதமரும், உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில் ஜம்முவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர், கூட்டணி நிர்பந்தங்களால்தான் பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. எனினும் விசுவாசமான குடிமகன் என்ற முறையில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன். இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்றார். மேலும் இது போன்ற தவறுகள் வருங்காலத்தில் ஏற்படக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: