உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை பா.ம.க கைப்பற்றும்

வியாழக்கிழமை, 8 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சேலம் செப்.8​- உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலம் பா.ம.க.அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களின் விருப்பமனுக்களை ற்ெறுக் கொள்ள வந்திருந்த அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.கடந்த 96 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சேலம் மாவட்டத்தில் மட்டும் 5 ஊராட்சி ஒன்றியம்,5 ஊராட்சி கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றியது.கடந்த 15 ஆண்டுகளில் கட்சி வளர்ந்திருக்கிறது.பல்வேறு தேர்தலை சந்தித்த அனுபவம் கட்சியினருக்கு உள்ளது.பா.ம.க.தனித்து போட்டியிடுவதற்கு கட்சியினர் அதிகம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.பொதுமக்கள்,படித்தவர்கள்,நடுநிலையாளர்கள் எந்த கட்சியையும் சாராத இளைஞர்கள் வரவேற்கின்றனர். ஆனால் இது காலம் தாழ்த்தப்பட்ட முடிவு என்றும் சொல்கின்றனர்.

உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதை விட்டுவிட்டு பழைய வாக்குசீட்டு முறையை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் மாநகர்,நகர்புறங்களில் மேயர் மற்றும் கவுன்சிலரையும்,நகர சபை தலைவர் ,கவுன்சிலரையும் தேர்ந்தெடுக்க 2 வாக்குகளையும், கிராமப்புறங்களில் ஊராட்சி தலைவர், கவுன்சிலர்,50 ஆயிரம் கவுன்சிலர் என 4 வாக்குகளும் பதிவு செய்யும் சூழ்நிலை உள்ளது.தலைவருக்கு ஒருநபருக்கும், கவுன்சிலருக்கு ஒரு நபருக்கும் ஓட்டு போடலாம் என்று பொதுமக்கள் நினைக்கும் போது  கட்சி சார்பில் போட்டியிடுபவர்களுக்கு அனைத்திலும் ஒரே சின்னம் இருக்கும் போது எது ஊராட்சிக்கு உள்ளது, எது 50 ஆயிரம் கவுன்சிலர்களுக்கு உள்ளது என்பது தெரியாது. எனவே வாக்கு சீட்டு முறை கொண்டு வந்து ஒவ்வொரு பதவிக்கு ஒவ்வொரு கலர் கொடுக்க வேண்டும்.

மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில்தான் வாக்குபதிவு நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் நினைத்தால் யாருக்கு வாக்களித்தோம் என்று வாக்களித்தபின் சீட்டு கிடைக்குமாறு வாக்குபதிவு இயந்திரத்தில் ஒரு மாற்றம் கொண்டுவர  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்க கூறினார். பேட்டியின் போது மாநில துணைத்தலைவர் மு.கார்த்தி,மாநில துணைப்பொதுச்செயலாளர் தமிழரசு,மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சண்முகம், மாநகர செயலாளர் கதிர் ராசரத்தினம்,தலைவர் செவ்வை அன்புக்கரசு,பசுமைதாயகம் மாநில துணை அமைப்பாளர் சத்ரியசேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: