டாக்டர் எம்.ஜி.ஆர். மாளிகை கட்டிடம்: முதல்வர் திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 8 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.8 -  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா நேறு (7.9.2011) தலைமைச் செயலகத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், உள்ளகரம் புழுதிவாக்கம் நகராட்சியில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு இடைவெளி ஈடு செய்யும் நிதி உதவியுடன் 7040 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். மாளிகை அலுவலகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், உள்ளகரம் புழுதிவாக்கம் நகராட்சியில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு இடைவெளி ஈடு செய்யும் நிதி உதவியுடன் 7040 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். மாளிகை அலுவலகக் கட்டடம் கூடுதல் பரப்பளவிலான துறைவாரியான அலுவலக அறைகள், மன்றக் கூட்ட அரங்கம், பார்வையாளர்கள் மற்றும் பொது மக்கள் அமரும் அறைகள் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில்,  நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிnullநீர் வழங்கல் துறைச் செயலாளர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: