மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உணவு கொண்டு வர தடை

வியாழக்கிழமை, 8 செப்டம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை,செப்.8 - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் உணவு பொருட்களின் பொட்டலம் கொண்டு வர போலீசார் திடீர் தடை விதித்துள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என தினசரி நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். இக்கோவிலுக்கு அடிக்கடி தீவிரவாதிகளின் மிரட்டல்கள் வருவதால், கோவிலின் 4 கோபுர வாசல்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டு கடும் சோதனைக்கு பின்னரே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். விழாக்காலங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு மெட்டல் டிடெக்டர் மூலமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் குடும்பத்தோடு வரும்போது உணவு பொட்டங்களை சிறிய மூட்டையாக கட்டி கொண்டு வருவதாகவும், கோயிலுக்குள் வைத்து சாப்பிட்டு விட்டு இலை, பேப்பர்களை குப்பையாக வீசி செல்வதாகவும் கோவில் நிர்வாகத்துக்கு தெரியவந்தது. இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உணவு பொருட்களின் பொட்டலம் கொண்டு வர போலீசார் திடீர் தடை விதித்துள்ளனர்.  இதுபற்றி போலீசாரிடம் விசாரித்தபோது, பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: