முக்கிய செய்திகள்

இலங்கையில் நானோ கார் தீப்பிடித்து எரிந்தது

வெள்ளிக்கிழமை, 9 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

கொழும்பு, செப்.9 - இலங்கையில் ஒரு நானோ கார் தீப்பிடித்து எரிந்துள்ள நிலையில் இது குறித்து ஆய்வு நடத்த அந்நாட்டுக்கு டாடா அதிகாரிகள் விரைந்துள்ளனர். கடந்த மே மாதம் இலங்கையில் நானோ கார் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குள் அங்குள்ள டாக்சி நிறுவனம் ஒன்று நானோ கார்களை வாங்கி வாடகைக்கு விடத் தொடங்கியது. குறைந்த கட்டணம் கொண்ட நானோ டாக்சி அங்கு பிரபலமாக தொடங்கியது. பட்ஜெட் டாக்சி என்ற பெயர் கொண்ட அந்த நிறுவனத்தில் தற்போது ஏராளமான நானோ கார்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. இந்த நிலையில் அந்த நானோ கார்களில் ஒன்று கடந்த 2 ம் தேதி திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. டிரைவர் காரை ஸ்டார்ட் செய்ய முயற்சித்த போது கார் எரிந்துள்ளது. உடனே டிரைவர் காரில் இருந்து இறங்கி விட்டார். இந்த விபத்துக்கான காரணம் முழுமையாக தெரியவில்லை. இது குறித்து ஆய்வு நடத்த டாடா அதிகாரிகள் இலங்கை விரைந்துள்ளனர். நானோ கார் அடிக்கடி தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் டாடா நிறுவனத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: