முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.அழகிரி மனைவிக்கு கலெக்டர் சகாயம் நோட்டீஸ்

சனிக்கிழமை, 10 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,செப்.10 - திருமங்கலம் அருகே என்ஜினீயரிங் கல்லூரிக்கு பாசன கால்வாய் ஆக்கிரமிப்பு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் அவரது மனைவி காந்தி, மகன்துரை தயாநிதி ஆகியோருக்கு மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை பகுதியில் மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளை சார்பில் தயா என்ஜினீயரிங் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. இந்த கல்லூரிக்கு கட்டிடம் கட்டுவதற்காக அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கியதாகவும், மேலும் அந்த பகுதியில் பாசன கால்வாயை ஆக்கிரமித்துவிட்டதாகவும் விவசாயிகள் சங்க தலைவர் ராமலிங்கம் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து கலெக்டர் சகாயம் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டதின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேஷ் மற்றும் உயர் அதிகாரிகளை கொண்ட குழு கடந்த மாதம் 19 ம் தேதி நேரில் சென்று ஆய்வு செய்தது. அப்போது ஆக்கிரமிப்பு தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அவரது மனைவி காந்தி, மகன் துரைதயாநிதி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.  இதில் இந்த கல்லூரிக்கு பாசன கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது குறித்து வருகிற 16ம் தேதி காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்மன் மு.க.அழகிரியின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்