முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போக்குவரத்துத் துறையில் கே.என்.நேரு அடித்த கொள்ளை

ஞாயிற்றுக்கிழமை, 11 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப்.10 -  போக்குவரத்துத்துறையில் கே.என்.நேரு முறைகேடுகள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார். நேற்று சட்டசபையில் போக்கு வரத்து துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:​ முதல்வர் ஜெயலலிதா ஆட்சி வரும் போதெல்லாம் அரசு போக்குவரத்து கழகங்கள் லாபத்தில் இயங்கும். தி.மு.க. ஆட்சி வரும் போதெல்லாம் நஷ்டத்தில் இயங்கும். 91-​96 அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.142 கோடி லாபம் வந்தது. 96-​2001​ல் தி.மு.க. ஆட்சியில் ரூ.674 கோடி நஷ்டம் ஏற்பட்டது. மீண்டும் 2001-​2006 அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.61 கோடி லாபம் வந்தது. 2006-​2011 தி.மு.க. ஆட்சியில் ரூ.1905 கோடி ரொக்கம் நஷ்டம் ஏற்பட்டது. இதில் போக்குவரத்து துறை அமைச்சராக கே.என். நேரு இருந்த போது, அவரும், அவரது கட்சியினரும் போக்குவரத்து துறை வருமானத்தை மறை முகமாக அவர்களின் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 90 சதவித பஸ்கள் சாதாரண பஸ்களாக இயக்கப்பட்டது. கருணாநிதி ஆட்சியில் கலர் கலராக பெயிண்ட் அடித்து பல வகை பெயர்களில் பஸ்கள் இயக்கினர். இதில் 40 சதவிதம்தான் சாதாரண பஸ்கள். விரைவு போக்குவரத்து கழகத்துக்கு புதிய பஸ்கள் கூட வாங்க வில்லை. அனைத்தும் பழைய பஸ்கள்தன். 1653 கூடுதல் நபர்களை போக்குவரத்து துறையில் நியமனம் செய்தார்கள். தற்காலிக ஓட்டுனர் டிரைவர்களுக்கு எங்கு பணி கொடுப்பது என்று தெரியாமல் அவர்களை ஏலம் விடும் அளவுக்கு நிறுவனம் இருந்தது. காலுக்காக காலணியை வெட்டுவதை விட்டு காலணிக்காக காலை வெட்டினார்கள்.  நேருவின் தவறான கொள்கை முடிவால் 8 போக்கு வரத்து கழங்கங்களும் தள்ளாடின. நியாயமற்ற பணி நியமனங்கள் தி.மு.க. ஆட்சியில் நடந்துள்ளது. நேர்முக தேர்வுக்கே வராத 40 பேர்களுக்கு வேலை கொடுத்துள்ளனர். உயரம் குறைவு எனச் சொல்லி நேர்முக தேர்வில் நிராகரிக்கப்படும் நபர் கவனிக்க வேண்டியவர்களை கவனித்த பிறகு மருத்துவரிடம் உயரம் சரியாக இருப்பதாக சான்றிதழ் வாங்கி வேலையில் சேர்ந்து இருக்கிறார்கள். இப்போது பார்த்தால் அவர்கள் உயரம் குறைவாக உள்ளது. ஓட்டுனர் நடத்துனர் போன்ற ஊழியர்களை அதிகம் நியமித்ததில் ரூ.70 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. அரசு போக்கு வரத்து கழக பணத்தை பயன்படுத்தி சொகுசு கார்கள் வாங்கி கே.என். நேரு தனது மனைவி, உறவினர் தேவைக்கு பயன்படுத்தி இருக்கிறார். ஸ்கார்பியோ, பொலிரோ போன்ற 17 சொகுசு கார்களை வாங்கி அவரும் மற்றவர்களும் பயன்படுத்தி உள்ளனர். இதில் அழகிரிக்கு ஒரு கார், பொன்முடிக்கு ஒரு கார், ஐ.பெரியசாமிக்கு ஒரு கார், ஆற்காடு வீராசாமிக்கு 2 கார், முன்னாள் துணை சபாநாயகருக்கு ஒரு கார், கே.என். நேருவுக்கு மட்டும் 8 சொகுசு கார். உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் தொழிலாளர்களின் பணத்திலும் மக்கள் பணத்திலும் இந்த கார் வாங்கப்பட்டு உள்ளது. இதை ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படுத்தியுள்ளனர். ஜவகர்லால் நேரு குழந்தை பருவத்தில் படிக்கும்போது அவர் படிக்கும் பள்ளிக்கூடத்தில் 4 வாசல்களிலும் கார் நிறுத்தப்பட்டு இருக்கும். செல்வந்தரான மோதிலால் நேருவே 4 கார் களைத்தான் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் கே.என். நேரு 8 கார்களை பயன்படுத்தியிருக்கிறார். சொகுசு வண்டிகளால் ரூ.5 கோடி பணம் விரயம் ஏற்பட்டுள்ளது. கே.என். நேருவின் வீடு, திருச்சி அலுவலகத்துக்கு வந்து செல்பவர்களுக்காக செலவழிக்கப்பட்ட தொகை ரூ.36 லட்சம் ஆகும். திருச்சி மண்டல போக்குவரத்து கழகம் மூலம் இது செலவழிக்கப்பட்டுள்ளது. விசாரித்ததில் திருச்சியில் உள்ள கே.என். நேரு வீடுதான் அப்போது அலுவலகமாகவும் இருந்தது. ஒவ்வொரு நாளைக்கும் என்னென்ன செலவு செய்தார்கள் என்பது புத்தகமாக தயாரித்துள்ளோம். சவுந்திரராஜன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு):​ கே.என். நேரு செய்த செலவினை கேட்கும்போது, எங்களுக்கு நெஞ்சடைப்பு வந்து விடும்போல் தெரிகிறது. எனவே அவர் மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்டு):​ போக்குவரத் துத்துறை பணத்தை நேருவும் அவரது குடும்பத்தினரும் முழுமையாக செலவழித்துள்ளது தெரிய வந்தது. அவர் தற்போது ஜெயிலுக்குள் இருக்கிறார். நிரந்தரமாக உள்ளே இருக்க அவர் மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி:​ கே.என். நேரு திருச்சிக்கு பக்கத்தில் உள்ள தனது தோட்டத்துக்கு செல்லும்போது ஒரு மணி நேரம் போக்குவரத்தில் சிக்கி கொள்கிறார். உடனே ஒரு உத்தரவு போட்டு இனிமேல் இந்த ரோட்டில் எந்த கனரக வாகனமும் வரக்கூடாது என்கிறார். இதனால் 2 கிலோ மீட்டர் அதிக தூரம் சுற்றி செல்லும் வகையில் வழித்தடங்களில் பஸ்கள் திருப்பி விடப்படுகின்றன. இதனால் அரசுக்கு ரூ.51 லட்சம் விரயமாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அலுவலகங்களுக்கு கே.என். நேரு வந்து சென்ற வகையில் ரூ.32 லட்சம் செலவு எழுதியுள்ளனர். ஆனால் கே.என். நேரு அங்கு போனதே இல்லை. பணிமனை, அலுவலகங்களுக்கு சென்றால் வருகை பதிவேட்டில் அது இடம் பெற்று இருக்கும். ஆனால் எதிலும் இல்லை. போகமலேயே வந்து சென்றதாக கணக்கு எழுதி உள்ளார். கே.என். நேரு தனக்கு வேண்டியவர்களுக்கும் தி.மு.க.வினருக்கும் சமூக நலப்பணியாளர்கள் என்ற பெயரில் 540 பேருக்கு பஸ் பாஸ் அந்த துறை மூலம் வழங்கி உள்ளார். இதனாலும் ஆண்டுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க. தொழிற்சங்கத்தில் உள்ளவர்கள் பணிக்கு போகமலேயே நேருவுடன் சுற்றிக்கொண்டு சம்பளம் வாங்கி உள்ளனர். இதனால் அரசுக்கு ரூ.23 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. போக்கு வரத்து சங்கத்தின் கடன் நிலுவை ரூ.2,017 கோடியாக உள்ளது. மூழ்கும் கப்பலாக போக்குவரத்துத்துறை உள் ளது. மொத்த நஷ்டம் 6,000 கோடி அளவிற்கு கே.என். நேருவின் ஆடம்பர ஊதாரித்தனமான செல்வுகளால் பல கோடி பணம் விரயமாக்கப்பட்டு இழப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அரசு பணத்தில் கே.என். நேரு செய்த செலவுகள் என்னென்ன என்பதை 2 புத்தகமாகவே அச்சடித்துள்ளோம். இது முதல்​அமைச்சரின் அனுமதி பெற்று அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும். சபாநாயகர் அதை நாட்டுமக்கள் தெரிந்துகொள்ளும் விதத்தில் செய்தியாளர்களுக்கும் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்