முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீஸ் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

சனிக்கிழமை, 10 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, செப்.11 - பாதுகாப்பு பலப்படுத்துவது குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நேற்று (10.9.2011) தலைமைச் செயலகத்தில், புதுடெல்லி உயர்நீதிமன்ற வளாகம் அருகில் ஏற்பட்ட குண்டு வெடிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கடந்த 7.9.2011 அன்று தலைநகர் டெல்லியில் உள்ள உயர் நீதிமன்ற வளாகம் அருகில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 13 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும் 88 பேர் படுகாயமடைந்தனர்.

புதுடெல்லி உயர் நீதிமன்ற வளாகம் அருகில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து, தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்துவது குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலாசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, உள்துறைச் செயலாளர் ரமேஷ்ராம்மிஸ்ரா, காவல்துறை தலைமை இயக்குநர் ராமானுஜம் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்