முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் சிறையில் கணவருடன் நளினிசந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 11 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

வேலூர்,செப்.11 - முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, வேலூர் சிறைச்சாலையில் தனது கணவர் முருகனை சந்தித்து பேசியதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த போது ஸ்ரீபெரும்புதூர் அருகே கடந்த 1991 ம் ஆண்டு மே மாதம் 21 ம் தேதி மனித வெடிகுண்டுக்கு பலியானார். இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. முருகனின் மனைவி நளினிக்கும் தூக்குத் தண்டனையே விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிறகு இது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 

இந்த நிலையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் கடந்த 9 ம் தேதியே தூக்கில் போடுவதாக இருந்தது. ஆனால் இதற்கு பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. தூக்கு தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சுமார் 8 வார காலம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 

முன்னதாக, இந்த மூவரின் கருணை மனுக்களையும் ஜனாதிபதி நிராகரித்து இருந்தார். இந்நிலையில் தமிழக சட்டசபையில் கடந்த ஆகஸ்ட் 30 ம் தேதி ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும். இவர்களது கருணை மனுக்களை ஜனாதிபதி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சூழலில்தான் கோர்ட்டும் தூக்குத் தண்டனைக்கு 8 வார கால இடைக்கால தடை விதித்துள்ளது. 

இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் தற்போது உயர் பாதுகாப்பு மிகுந்த வேலூர் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வேலூர் சிறைச்சாலையில் நளினி நேற்று தனது கணவர் முருகனை சந்தித்து பேசியதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. நளினி, முருகன் சந்திப்பு சுமார் 20 நிமிடம் நீடித்தது. ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தம்பதிகள் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். அப்போது கணவனும், மனைவியும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது தெரியவில்லை. இந்த உருக்கமான சந்திப்பு சுமார் 20 நிமிடம் வரை நீடித்ததாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago