முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பையை கைப்பற்றிய இந்திய ஹாக்கி வீரர்களுக்கு பரிசு மழை

வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, செப். - 16  - ஆசிய கோப்பையை வென்ற ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ. 25,000 பரி சு வழங்கப்படுமென ஹாக்கி சங்கம் அறிவித்தது. இதை வீரர்கள் ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து கூடுதல் பரிசுத் தொகை அறிவிக்கப் பட்டது. சீனாவில் உள்ள ஆர்டோஸ் நகரில் ஆசிய சாம்பியன் பட்டத்துக்கான ஹாக்கிப் போட்டி நடந்தது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 4 - 2 என்ற கோல் கணக்கில் வென்று இந்தியா கோப்பையை கைப்பற்றி யது. 

இந்திய வீரர்கள் கடந்த திங்கட்கிழமை நாடு திரும்பினர். செவ்வாய் கிழமை விருந்து அளிக்கப்பட்டது. அப்போது இந்திய வீரர்கள் ஒவ் வொருவருக்கும் தலா ரூ. 25,000 பரிசாக வழங்கப்படும் என்று இந்திய ஹாக்கி சங்கம் அறிவித்தது. 

இதை வீரர்கள் ஏற்கவில்லை. இந்தப் பரிசை ஏற்றால் தங்களின் கெள ரவம் குறைந்துவிடும் என்று அவர்கள் கூறினார்கள். இது ஏமாற்றம் அளிக்கும் செயல் என்று கேப்டன் ராஜ்பால் சிங் கூறினார். 

சாம்பியன் பட்டத்தை வென்ற எங்கள் வீரர்களுக்கு உரிய கெளரவம் அளிக்கப்பட வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். அப்போ து தான் இளம் வீரர்கள் ஹாக்கியை நோக்கி வருவார்கள் என்றும் குறி ப்பிட்டார். 

குருபாஸ் சிங் என்ற வீரர் கூறுகையில், இது மிகக் குறைந்த பரிசுத் தொகை. இது போன்ற நிலை நீடித்தால் ஹாக்கியை யாரும் சீண்ட மா  ட்டார்கள். மாறாக கிரிக்கெட்டை நோக்கித் தான் செல்வார்கள் என் று தெரிவித்தார். 

நான் அகில இந்திய விளையாட்டு ஒன்றில், ஆடினால் என்னை அமர் த்துபவர்கள் ரூ. 55,000 வரை தருவார்கள். அப்படிப்பட்ட நிலையில் இந்த ரூ. 25,000 எதற்கு? என்று இன்னொரு வீரர் கூறினார். 

இதையடுத்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய்மாக்கா ன், ஒவ்வொரு வீரருக்கும், ரூ. 1.50 லட்சம் வீதம் பரிசுத் தொகை வழ ங்கப்படும் என்று அறிவித்தார். 

இது குறித்து அவரிடம் கேட்ட போது, ரூ. 25,000 பரிசுத் தொகையை இந்திய ஹாக்கி சங்கம் தான் அறிவித்தது. மத்திய அரசுக்கு அதில் பங் கு இல்லை. அதனால் ஒவ்வொரு வீரருக்கும் ரூ. 1.50 லட்சம் அளிக்கப் படும். கடந்த 6 மாதத்தில் ஹாக்கி அணிக்காக மத்திய அரசு ரூ.7.81 கோடியை அளித்துள்ளது என்று தெரிவித்தார். 

பஞ்சாப் மாநில அரசு இந்திய வீரர்களுக்கு மொத்தமாக ரூ. 25 லட்சத் தை பரிசாக அறிவித்துள்ளது. இந்திய அணியில் இடம் பெற்றவர்களில் கேப்டன் உள்பட 7 பேர் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

இந்த அணியில் இடம் பெற்ற யுவராஜ் வால்மீகி என்ற வீரர் மராட்டி ய மாநிலத்தைச் சேர்ந்தவர். அவருக்கு அந்த மாநில அரசு ரூ. 10 லட்ச த்தை அறிவித்துள்ளது. அத்துடன் அரசாங்க வேலை அளிக்கவும் முன் வந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்