முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட்டி விகித்தை இந்திய ரிசர்வ் வங்கி மேலும் உயர்த்தியது

சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,செப்.- 17 - இந்திய ரிசர்வ் வங்கியானது கடனுக்கான வட்டி விகித்தை மேலும் உயர்த்தியுள்ளது. இதனால் வீட்டுக்கடன், ஆட்டோ கடன் மற்றும் இதர காரியங்களுக்காக வங்கி கடன் வாங்குபவர்கள் அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும். இதனால் பணவீக்கம் குறையும் என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் கணக்கு பொய்யாகும். நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும் போதெல்லாம் வங்கிக்கடனுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது. கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து இதுவரை 12 முறை வட்டி விகித்தை இந்தியன் ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. வட்டி விகித்தை உயர்த்தினால் பணப்புழக்கம் குறைந்து பணவீக்கம் குறையும் என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் கணக்காகும். தற்போது 25 பைசா என்ற அடிப்படையில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இனிமேல் குறுகிய கால கடன் கொடுப்பதற்கு 8.25 சதவீதமாகவும் குறுகிய கால கடன் பெறுதற்கு 7.25 சதவீதமாகும் வட்டி இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இந்த வருடாந்திர இடைக்கால மறுஆய்வு அறிவிப்பில் இதர வட்டி விகித்ததில் எந்தவித மாற்றம் செய்யப்படவில்லை. இந்திய தலைமை வங்கியின் நிதிக்கட்டுப்பாடு நடவடிக்கையால் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்பார்த்த பணவீக்கமும் குறைந்துள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியானது பலமுறை வட்டி விகித்தை அதிகரித்தபோதிலும் நாட்டில் பணவீக்கம் கடந்த ஜூலை மாதம் 9.2 சதவீதத்தில் இருந்து 9.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது இரட்டை இலக்கை விரைவில் அடையும் என்றும் அஞ்சப்படுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியானது 2011-12-ம் ஆண்டு நிதியாண்டின் முதல் கால் பகுதியில் 8.8 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக குறைந்துவிட்டது. இது கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைவாகும். அதேசமயத்தில் தொழிற்சாலை உற்பத்தியும் 3.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைவாகும். நாட்டில் விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் நவீன தொழில்நுட்பம் மூலம் உற்பத்தியை அதிகரிக்காத வரை பணவீக்கம் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும். வட்டி வகித்தை அதிகரிப்பதால் பணவீக்கம் குறையாது. அப்படி குறைந்தாலும் அது நிரந்தரமானதாக இருக்காது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்