தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை

ஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை.செப்.- 18 - தந்தை பெரியாரின் 133-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திராவிடர் இயக்கத்தின் ஸ்தாபகர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 133-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் நேற்று (செப்.17) சிறப்பாக கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க., திராவிடர் கழகம்,  தே.மு.தி.க. ம.தி.மு.க., தி.மு.க. உட்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமின்றி தமிழக அரசின் சார்பிலும் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் நேற்று காலை 11.00 மணிக்கு சென்னை அண்ணா மேம்பாலம் அருகிலுள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, சண்முகவேலு, பி.பழனியப்பன், சி.வி.சண்முகம், சண்முகநாதன், முகமது ஜான், கே.வி.ராமலிங்கம், எஸ்.பி.வேலுமணி, டி.கே.எம்.சின்னய்யா, எம்.சி.சம்பத், செந்தமிழன், கோகுலஇந்திரா, செல்வி ராமஜெயம், செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், வளர்மதி,  அ.தி.ம.க. அமைப்பு செயலாளர்கள் சுலோச்சனாசம்பத், விசாலாட்சி நெடுஞ்செழியன்,  நிர்வாகிகள் தமிழகன் உசேன், பி.எச்.பாண்டியன், தென்சென்னை மாவட்ட (வடக்கு) செயலாளர் பாலகங்கா, வடசென்னை மாவட்ட (வடக்கு) செயலாளர் வெற்றிவேல், வடசென்னை மாவட்ட (தெற்கு) செயலாளர் பாலகங்கா, அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் அண்ணாநகர் பாண்டுரங்கன், பூங்காநகர் கு.சீனிவாசன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் சரஸ்வதி ரங்கசாமி, எழும்பூர் வேளாங்கன்னி, மற்றும் மாநில, மாவட்ட அ.தி.மு.க.   உறுப்பினர்கள் யாவரும் திரளாக கலந்து கொண்டனர் சிறப்பித்தனர்.
 

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்: