முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் விளையாட்டில் ஊழல்:பி.எஸ்.லல்லி வீட்டில் ரெய்டு

ஞாயிற்றுக்கிழமை, 6 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.- 6 - காமன்வெல்த் போட்டிகளை ஒலிபரப்ப காண்ட்ராக்ட் விடுத்ததில் ரூ. 135 கோடி அளவுக்கு முறைகேட்டு நடந்தது தொடர்பாக பிரசார் பாரதி தலைமை நிர்வாகி லல்லி வீடு மற்றும் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். 

டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளுக்கான ஏற்பாடு செய்வதில் ஆயிரக்கணக்கான கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதில் பிரிட்டீஷ் நிறுவனத்திற்கு கான்ராக்ட் கொடுத்ததும் அடங்கும். விளையாட்டு போட்டிகளை பிரீட்டீஷ் நிறுவனம் ஒலிபரப்ப ரூ. 246 கோடிக்கு காண்ட்ராக்கடை பிரசார் பாரதி கொடுத்துள்ளது. இதில் ரூ. 135 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி லல்லி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 

இதனையொட்டி டெல்லியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று சி.பி.ஐ.அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பிரீட்டீஷ் நிறுவனமானது பிரசார் பாரதியிடம் ரூ. 246 கோடிக்கு ஏலம் எடுத்து அதை இந்திய நிறுவனமான ஜூமுக்கு வெறும் ரூ. 177 கோடிக்கு சப்-காண்ட்ராக்ட் விடுத்துள்ளது. இதனால் அரசுக்கு ரூ. 135 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனையொட்டி லல்லி,பதவியில் இருந்து கடந்தாண்டு டிசம்பர் 21-ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் 1971-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பட்டம் பெற்றார். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ரூ. 135 கோடி அரசுக்கு இழப்பு என்றால் மற்ற விஷயத்தில் அரசுக்கு எவ்வளவு நஷ்டம் இருக்கும் என்பதை யூகித்துக்கொள்ளுங்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்