முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தல்: விருப்ப மனுக்கள் பெறப்படும்: தங்கபாலு அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப்.-18 - தமிழக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்றும் இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்றும் மாநில க”ங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு அறிவித்துள்ள“ர். தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழக தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அகில இந்திய செயலாளரும், மேலிட பார்வையாளருமான கிருஷ்ணமூர்த்தி, குமரி அனந்தன், முன்னாள் மத்திய மந்திரிகள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர் மற்றும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், டி.யசோதா, மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் சாய்லட்சுமி, சேவாதள தலைவர் கோவை செல்வராஜ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, எம்.பி.க்கள் ஜே.எம்.ஆருண், என்.எஸ்.வி.சித்தன், மாணிக்தாகூர், எம்.எல்.ஏ.க்கள் விஜயதரணி, ஜான்ஜேக்கப், பிரின்ஸ் மற்றும் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்திற்கு பின்னர் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:​ இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் எடுக்க வேண்டிய நிலை பற்றி ஆராயப்பட்டு அகில இந்திய தலைமைக்கும் தெரிவித்து, அவர்கள் ஒப்புதலுடன் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்ற முடிவை அறிவிக்கிறோம். இந்த தேர்தலுக்காக மாநில, மாவட்ட தேர்தல் குழுக்கள் அமைக்கப்படும். 18​ந் தேதி முதல் 20​ந் தேதி வரை காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படும். மேயர் பதவிக்கு ரூ.10 ஆயிரம், மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு ரூ.3 ஆயிரம், நகராட்சி தலைவர் பதவிக்கு ரூ.5 ஆயிரம், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு ரூ.1,000, பேரூராட்சி தலைவர் பதவிக்கு ரூ.1,000, பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு ரூ.500, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலருக்கு ரூ.3 ஆயிரம், பஞ்சாயத்து னியன் கவுன்சிலருக்கு ரூ.1,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில தலைமை, பார்வையாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும்.
மாவட்ட குழுக்கள் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியானவர்களை மாநில குழுவுக்கு அனுப்பும். மாநில குழு வேட்பாளர்களை அறிவிக்கும்.
இது தவிர 3 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. ராஜீவ் காந்தி கொலையாளிகள் 3 பேருக்கும் சட்டத்தின்படி தண்டனை விதிக்க வேண்டும். அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும். பரமக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கும், அரக்கோணம் அருகே ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். பரமக்குடிக்கு காங்கிரஸ் குழு ஒன்று ஓரிரு நாளில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும்.
காங்கிரஸ் கட்சி அனைத்து பொறுப்புகளுக்கும் போட்டியிட்டு வெற்றியை பெற மத்திய அரசின் சாதனைகளையும், அதனால் தமிழகம் பெற்ற பலன்களையும் எடுத்துக் கூறி மக்களின் ஆதரவை பெற வேண்டும். இதற்கு காங்கிரசார் முழுமூச்சுடன் பாடுபட வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாங்கள் தனித்து போட்டியிட எந்த நிர்ப்பந்தமும் இல்லை. ஒவ்வொரு தேர்தலின் போதும் எடுக்கப்படும் முடிவு அந்தந்த சூழலில் எடுக்கப்படுவது. கூட்டணி என்பது நிரந்தரமல்ல. இதில் எந்த குழப்பமும் இல்லை. மத்திய அளவில் தி.மு.க.வுடனான கூட்டணி தொடர்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. திருச்சி மேற்கு சட்டசபை தொகுதியில் கூட்டணி தர்மப்படி தி.மு.க. போட்டியிட்ட தொகுதி என்பதால் அவர்களுக்கு விட்டுக்கொடுத்திருக்கிறோம்.
இவ்வாறு கே.வி.தங்கபாலு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்