முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச லேப்டாப் திட்டம்: மதுரையில் செல்லூர் கே. ராஜூ துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,செப்.- 18 - தமிழக அரசின் இலவச லேப்டாப் திட்டத்தை மதுரை மாவட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார்.  தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இதன் அடிப்படையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயபலலிதா அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மதுரை பொன்முடியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த விழாவில் 170 மாணவிகளுக்கு ரூ.23,92,070 மதிப்பிலும் வடக்கம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 64 மாணவ, மாணவியருக்கு ரூ.9,20,544 மதிப்பிலும் மொத்தம் ரூ.32, 92, 614 மதிப்பிலான லேப்டாப்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழச்சிகளில் கலந்து கொண்டு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு லேப் டாப்களை வழங்கி பேசும் போது, தமிழ்நாட்டில் கல்வி பயிலும் 9.12 லட்சம் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணனி வழங்குவதற்காக ரூ.912 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. பள்ளிகளில் 12 ம் வகுப்பு பயிலும் 23,546 மாணவ, மாணவியருக்கு கலைக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் 26, 474 மாணவ, மாணவியருக்கும், பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் மற்றும் நான்காம் ஆண்டு பயிலும் 1698 மாணவ, மாணவியருக்கும் மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளில் பயிலும் 2,331 மாணவ, மாணவியருக்கும் ஆக மொத்தம் 54,.049 கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு ரூ.76,05,23,479 மதிப்பில் மடிக்கணினிகள் இந்த ஆண்டு வழங்கப்பட உள்ளது என்றார்.    முன்னதாக நிகழ்ச்சிக்கு கலெக்டர் சகாயம் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் ஸ்ரீதேவி வரவேற்றார். முடிவில் தலைமை ஆசிரியர் கல்யாணி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் எம்.முத்துராமலிங்கம், கதிரவன், எம்.வி.கருப்பையா, உசிலம்பட்டி கல்வி மாவட்டஅலுவலர் காந்திமதி, வருவாய் கோட்டாட்சியர் புகழேந்தி, கருமாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன்,கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனர் பாண்டுரங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago