முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அல்கொய்தா தீவிரவாதிகள் எங்கிருந்தாலும் தாக்குவோம் அமெரிக்கா அறிவிப்பு

திங்கட்கிழமை, 19 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,செப்.- 19  - அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தினர் உலகில் எங்கிருந்து செயல்பட்டாலும் அவர்களை ஒழித்துக்கட்ட தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் பின்லேடனை அமெரிக்க கூட்டுப்படைகள் சுட்டுக்கொன்றுவிட்டன. இருந்தபோதிலும் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் நடவடிக்கைகள் ஒடுங்கவில்லை. அமெரிக்காவை குறிவைத்து செயல்பட்டு வருகிறது. கடந்த 11-ம் தேதி அமெரிக்காவை மீண்டும் தாக்க திட்டமிட்டிருந்தது. அதை அமெரிக்க புலனாய்வுத்துறையினர் தடுத்துவிட்டனர். மேலும் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தினர் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டுமல்லாது உலகில் எந்த நாட்டிலும் இருந்து செயல்பட்டாலும் அவர்களை ஒழிக்க அமெரிக்கா தாக்குதல் நடத்தும். சம்பந்தப்பட்ட நாடு நடவடிக்கை எடுத்தாலும் சரி, எடுக்காவிட்டாலும் சரி, விரும்பம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அதை அமெரிக்கா பொருட்படுத்தாமல் அல்கொய்தாவை ஒழிக்க தாக்குதல் நடத்துவோம் என்று வெள்ளை மாளிகையின் தீவிரவாத ஒழிப்பு பிரிவு ஆலோசகர் ஜான் பெர்னன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு சட்டக்கல்லூரியில் மாணவர்களிடத்தில் ஜாந் பெர்னன் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் அல்கொய்தா மீது அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை ஒரு கட்டுப்பாட்டிற்குள் இருக்காது. உலகின் எங்கிருந்து அந்த தீவிரவாத இயக்கம் செயல்பட்டாலும் அதை ஒழித்துக்கட்டியே தீருவோம் என்றார். அமெரிக்காவுக்கோ அல்லது வேறுநாட்டுக்கோ தீவிரவாதத்தால் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதை சர்வதேச சட்டப்படி தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் பெர்னன் மேலும் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்