முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஆர்.ராதா அறக்கட்டளை துவக்க விழா

செவ்வாய்க்கிழமை, 20 செப்டம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, செப்.20 - மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதா பெயரில் புதிய அறக்கட்டளை துவக்கப்பட்டது. நடிகர் எம்.ஆர்.ராதாவின் 32 வது நினைவு நாள் சென்னையில் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் எம்.ஆர்.ராதா பெயரில் புதிய அறக்கட்டளை துவக்கப்பட்டது. இந்த விழாவில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ., சத்யராஜ், ராதாரவி, வாகை சந்திரசேகர், மணிவண்ணன், சார்லி, செல்வராஜ், கே.என்.காளை மற்றும் ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர். 

விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், நடிகர் எம்.ஆர்.ராதா தனது கருத்துக்களை சினிமாவில் தைரியமாக சொன்னவர். எல்லோருக்கும் பிடித்தமான நடிகர். அதிகம் சம்பளம் வாங்கிய நடிகரும் எம்.ஆர்.ராதா தான் என்றார். 

அறக்கட்டளை நிர்வாகி எம்.ஆர்.ராதா மகள் ரத்திகுமார் கூறுகையில், இந்த அறக்கட்டளை மூலம் ஏழை எளிய, முதியோர்களுக்கு நிறைய உதவிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம். மருத்துவ முகாம் நடத்த உள்ளோம். குறிப்பாக கிராமப் பகுதிகளுக்கு அதிக உதவிகள் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.  

இதேபோல் எம்.ஆர்.ராதாவின் குறும்படம் வெளியீட்டு விழா சென்னை பிலிம் சேம்பரில் நடைபெற்றது. `என் பார்வையில் எம்.ஆர்.ராதா' என்ற 40 நிமிட குறும்படத்தை கலைப்புலி தாணு வெளியிட, இயக்குநர் பி.வாசு பெற்றுக் கொண்டார்.விழாவில் முக்தா சீனிவாசன் பேசுகையில் தேனாம்பேட்டை சாலைக்கு எம்.ஆர்.ராதா பெயரை சூட்ட வேண்டும் என்றார்.     

விழாவில் கவிஞர் பிறைசூடன், நடிகர்கள் வாசுவிக்ரம், சார்லி, இயக்குநர் மதன், நெல்லை சுந்தர்ராஜன், பேராசிரியர் மகேஸ்வரி, படஅதிபர் தினேஷ், ரமேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago