முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. கூட்டம்: பிரதமர் அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 20 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.21 - ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு செல்கிறார். புதுடெல்லியில் இருந்து லண்டன் சென்று அங்கிருந்து நாளை மறுதினம் நியூயார்க் நகர் சென்றடைகிறார். ஐக்கிய நாடுகள் சபை கூட்டம் கடந்த 13-ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் சர்வதேச தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றி வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பு நாடுகள் அதிகரித்துவிட்டதாலும் கால சூழ்நிலை மாறிவிட்டதாலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையிலும் சீர்திருத்தம் கொண்டு வருவது குறித்து தலைவர்கள் பேசி வருகிறார்கள். ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கும் மன்மோகன் சிங் முதலில் பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் அப்போதுதான் ஐக்கிய நாடுகள் சபை திறம்பட செயல்பட முடியும் என்றும் வலியுறுத்தி பேசுவார் என்று தெரிகிறது. மேலும் தீவிரவாதத்தை ஒடுக்க சர்வதேச அளவில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் மன்மோகன் சிங் கேட்டுக்கொள்வார். நியூயார்க் நகரில் ஜப்பான், ஜெர்மன், சீனா ஆகிய நாடுகளின் தலைவர்களை மன்மோகன் சிங் சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது. ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் சந்திப்பு இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. பாகிஸ்தான் பிரதமர் கிலானியை சந்தித்து பேசவும் அதிபர் ஒபாமா மறுத்துவிட்டார். பாகிஸ்தானில் பின்லேடன் மறைந்து இருந்தது அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது. மேலும் தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்பது ஒபாமாவின் கணிப்பாகும். பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்க இந்த நியூயார்க் பயணத்தை மன்மோகன் சிங் பயன்படுத்திக்கொள்வார் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்