முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் லீக்: டிரினிடாட்டுக்கு 2-வது வெற்றி

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

ஐதராபாத், செப். 21 - சாம்பியன்ஸ் லீக் டி - 20 போட்டியில் ஐதராபாத்தில் நேற்று நடந்த முதல் லீக் ஆட்டத்தில் டிரினிடாட் அன்ட் டுபாக்கோ அணி 51 ரன் வித்தியாசத்தில் லெய்செஸ்டர்ஷயர் அணியை வீழ்த்தி தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கத்தில் நேற்று மா லை 4.30 அணிக்கு துவங்கிய முதல் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம் பெ ற்று உள்ள டிரினிடாட் அணியும், லெய்செஸ்டர்ஷயர் அணியும் மோ தின. 

முன்னதாக, இதில் டாசில் வெற்றி பெற்ற டிரினிடாட் அணி பேட்டிங் கை தேர்வு செய்தது. அந்த அணி சார்பில், சிம்மன்ஸ் மற்றும் பரத் இரு வரும் ஆட்டத்தை துவக்கினர். முதலில் களம் இறங்கிய அந்த அணி அபாரமாக பேட்டிங் செய்தது. 

டிரினிடாட் அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு, 168 ரன்னைக் குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் இருவரும் அதிரடியாக ஆடி, அரை சதம் அடித்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றனர். 

துவக்க வீரர் சிம்மன்ஸ் 58 பந்தில் 67 ரன்னை எடுத்தார். இதில் 7 பவு ண்டரி அடக்கம். அட்ரியன் பரத் 47 பந்தில் 62 ரன்னை எடுத்தார். இதி ல் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, பிராவோ 18 ரன்னையும், ராம்டின் 11 ரன்னையும் எடுத்தனர். 

லெய்செஸ்டர்ஷயர் அணி தரப்பில், குர்னே 33 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். அப்துல் ரசாக், ஹெண்டர்சன் மற்றும் ஹொகார் டு ஆகியோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை. 

லெய்செஸ்டர்ஷயர் அணி 169 ரன்னை எடுத்தால் வெற்றி  பெறலாம் என்ற இலக்கை டிரினிடாட் அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்னை எடு த்தது. 

இதனால் இந்த லீக் போட்டியில் டிரினிடாட் அன்ட் டுபாக்கோ அணி 51 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்தத் தொடரில் முன் னேறி வருகிறது. அந்த அணிக்கு இது 2 -வது வெற்றியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

லெய்செஸ்டர்ஷயர் அணி சார்பில், டெய்லர் அதிகபட்சமாக, 47 பந் தி ல் 56 ரன்னை எடுத்தார். அடுத்தபடியாக அப்துல் ரசாக் 20 பந்தில் 21 ரன்னை எடுத்தார். ஹெண்டர்சன் 10 ரன் எடுத்தார். முன்னணி வீரர்கள் 5 பேர் ஓரிலக்க ரன்னிலேயே ஆட்டம் இழந்தனர். 

டிரினிடாட் அணி தரப்பில், ராம்பால் 14 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். பத்ரி 7 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். நரை ன் 18 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, கூப்பர் 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக பரத் தேர்வு செ ய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago