முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்வுக் குழுத் தலைவராக ஸ்ரீகாந்த் நீடிப்புக்கு எதிர்ப்பு

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, செப். 21 - இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக ஸ்ரீகாந்த் நீடி க்கப்பட்டார். அவருக்கு இன்னும் ஒரு ஆண்டு அந்த பதவி இருப்பதா ல் கிரிக்கெட் வாரியம் அவரை தேர்வுக் குழுத் தலைவராக நீட்டித்துள்ளது. தேர்வுக் குழு உறுப்பினரான யஷ்பால் சர்மாவின் பதவிக் காலம் முடி வடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு உரிய இடத்தில் மொகிந்தர் அமர் நாத் தேர்வு பெற்றார். வேறு எந்த மாற்றமும் தேர்வுக் குழுவில் செய்யப்படவில்லை. 

தேர்வுக் குழு தலைவராக ஸ்ரீகாந்த் நீடிக்கப்பட்டதற்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ், மதன்லால் ஆகியோர் எதிர்ப்பு தெரி வித்து உள்ளனர். கபில்தேவ் இது தொடர்பாக கூறியதாவது - 

பதவிக் காலம்இருப்பதால் தேர்வுக் குழுத் தலைவர் பதவியில் ஸ்ரீகாந் த் நீட்டிக்கப்பட்டு உள்ளார். இந்த விதியில் மாற்றம் செய்யாதது ஏன்? என்று தெரியவில்லை. உலகக் கோப்பையை வெல்வதற்கு தேர்வுக் குழுவினரின் பணி முக்கியமானதாக இருந்தது. 

ஆனால், இங்கிலாந்தில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு தேர்வுக் குழுவினரின் பொறுப்பும் இருக்கிறது. இதற்காக, அவர்களை குற்றம் சாட் ட விரும்பவில்லை. 

தற்போது வீரர்களின் ஆட்டம் மோசமாக உள்ளது. எனவே தேர்வுக் குழுத் தலைவராக கும்ளேயை நியமித்து இருக்கலாம். இவ்வாறு உல கக் கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் கூறினார். 

முன்னாள் வீரர் மதன்லால் கூறும் போது, தேர்வுக் குழுத் தலைவர் பதவிக்கு புதிதாக, ஒருவரை நியமித்து இருக்கலாம். புதிதாக வருப வர்  புதிய கண்ணோட்டத்துடன் அணியை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லலாம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்