முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெங்காய ஏற்றுமதிக்கு தடையை நீக்கியது அரசு

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.21 - வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கிவிட்டது. இதனால் வெங்காய ஏற்றுமதி அதிகரிப்பதோடு உள்நாட்டில் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஓரளவு விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. உள்நாட்டில் கடந்த மாதம் வெங்காய விலை அதிகரித்தது. இதனால் விவசாயிகள் ஓரளவு லாபம் அடைந்தனர். உள்நாட்டில் விலை உயர்ந்ததால் வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுவதை மத்திய அரசு தடை செய்தது. இதனால் உள்நாட்டில் வெங்காய விலை குறைந்தது. 60 சென்ட் நிலத்தில் வெங்காயம் நட வேண்டுமானால் 5 மூடை விதை வெங்காயம் வேண்டும். ஒரு மூடை விதை வெங்காயத்தை ரூ. ஆயிரத்து 500 கொடுத்து வாங்கி நட்டிய விளைச்சலுக்கு வந்த பிறகு ஏற்றுமதிக்கு தடை செய்ததால் உள்நாட்டில் விலை சரிந்தது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக வெங்காய விவசாயம் செய்தவர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளானார்கள். மேலும் தற்போது குறிப்பாக தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள சில பகுதிகளில் தற்போது வெங்காயம் நல்ல விளைச்சலை கண்டுள்ளது. ஆனால் விலை குறைந்துவிட்டதால் விவசாயிகளுக்கு கட்டுபடியாகாத விலை கிடைக்கும். இதனால் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகிக்கொண்டியிருக்கிற இந்த நேரத்தில் மத்திய விவசாய அமைச்சகத்திற்கான கேபினட் கூட்டம் நடைபெற்றது. அப்போது வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடிவு செய்யப்பட்டது என்று கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய வேளாண்மை துறை அமைச்சர் சரத்பவார் தெரிவித்தார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் இருந்து பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்