முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க வேட்பாளர் பாஸ்கரன் வேட்பு மனுத்தாக்கல்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, செப்.22 - புதுவை இந்திராநகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் சுத்துக்கேணி பாஸ்கரன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். புதுவை இந்திராநகர் தொகுதி இடைத்தேர்தல் அடுத்தமாதம் 13ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் 19ந் தேதி தொடங்கியகு. கடந்த 2 நாட்களாக யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.

நேற்று காலை முத்திரையர்பாளையத்தில் அ.தி.மு.க தொண்டர்கள் குவிந்தனர். அங்குள்ள அஞ்சநேயர் கோவிலில் சுத்துக்கேணி பாஸ்கரன் சாமி கும்பிட்டார். அவருடன் மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன், தமிழக அமைச்சர்கள் அக்கிரி கிருஷ்ணமூர்த்தி, சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், செம்மலை எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஓம்சக்திசேகர், புருசோத்தமன், பெரியசாமி, பாஸ்கரன் ஆகியோர் சாமி கும்பிட்டனர். பின்னர் அங்கிருந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சுத்துக்கேணி பாஸ்கரன் வேட்பு மனுத்தாக்கல் செய்ய காந்தி நகருக்கு ஊர்வலமாக வந்தார்.

ஊர்வலத்தில் அவைத்தலைவர் பாண்டுரங்கன், இணை செயலாளர்கள் மணிமாறன், திருநாவுக்கரசு, காசிநாதன், பரசுராமன், அரசி, துணைத்தலைவர் உமாபதி, துணைசெயலாலர்கள் வேங்கடசாமி, கணேசன், பன்னீர்செல்வி, நகர செயலாளர்கள் ரவீந்திரன், அன்பானந்தம், தொகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி., நாராயணன், சேகர், செந்தில், முருகன், தமிழ்செல்வன், சரவணக்குமார், அன்பழகஉடையார், மற்றஉம் வார்டு தொகுதி, அணி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள், வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு 100 மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள உழவர்கரை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ருகே ஊர்வலம் வந்து சேர்ந்தது. 

தமிழக அமைச்சர்கள் மற்றும் செம்மலை எம்.பி ஆகியோருடன் அ.தி.மு.க வேட்பாளர் சுத்துக்கேணி பாஸ்கரன் காந்தி நகரில் உல்ல தொழிலாவல் நலத்துறை அலுவலகத்திற்கு சென்றார். தேர்தல் நடத்தும் அதிகாரியும், தொழிலாளர் நலத்துறை ஆணையருமான மலர்கண்ணணிடம் மனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக இந்திராநகர் தொகுதி அ.தி.மு.க செயலாளர் கே.எஸ்.மணி மனுத்தாக்கல் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்