முக்கிய செய்திகள்

பொன்முடியின் ஜாமீன் மனு தள்ளூபடி

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை செப். 23 - நில பறிப்பு வழக்கு ஒன்றில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்தது. விழுப்புரம் பெரியர் போக்குவரத்து கழக ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை குறைந்த விலையில் தன்னுடைய சிகா அறக்கட்டளைக்கு வாங்கியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  இந்த வழக்கில் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் சாந்தி, பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சிகா அறக்கட்டளை தலைவர் ஆகியோர் மீதும் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்த வழக்கில் 2001 அகஸ்ட் 31ம் தேதி கைது செய்யப்பட்ட பொன்முடி, தனக்கு ஜாமீன் வழங்க கோரி விழுப்புரம் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  இதையடுத்து ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு பொன்முடி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி சுதந்திரம் விசாரித்து மந்திரியாக இருந்தபோது தன்றுடைய பதவியை தனக்கு சதாகமான முறையில் பயன்படுத்தியுள்ளார் என்பதற்க்கு முகாந்திரம் உள்ளது.  இவர் மேல் தற்போது சதராணமான ஐடஇ பிரிவில் மாத்திரமே ஊஐத பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஆனல் இவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய  வேண்டும்.

தந்தை பெரியார் போக்குவரத்து கழகத்திற்கு மிகுந்த நஷ்டத்தை எற்படுத்தி.  யுள்ளார் என்று அடிப்படை முகாந்திரம் உள்ளது.  இவர் மேல் சுமத்தபட்டிருக்கும் குற்றங்கள் தீவிரமாக உள்ளதால் இவர் இந்த வழக்கில் ஜாமீன் பெறுவதற்கான தகுதி அற்றவர் என தீர்ப்பளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: