முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செலவு கணக்கு காட்டாத 3910 பேர் தேர்தலில் நிற்கத்தடை

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப். 23​ தேர்தல் செலவு கணக்கு காட்டாத 3910 பேர் 3 ஆண்டுகள்வரை தேர்தலில் நிற்க தடைசெய்யப்பட்டுள்ளனர் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.  இது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்பு தேர்தல் செலவு கணக்கு காட்டவேண்டும் என்பது தேர்தல் கமிஷன் உத்தரவு. அதேபோல் தற்போது நடைபெறும் உள்ளாட்சி தேர்தலுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் உரிய அலுவலரிடம் தங்கள் தேர்தல் செலவின கணக்குகளை ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்காதவர்கள் மீது தேர்தல் கமிஷனால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தகுதி நnullீக்கம் செய்யப்படுவார்கள். 2006 சாதாரணத் தேர்தல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு செலவு கணக்கு தாக்கல் செய்யாத 3,910 பேர் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 2,395 பேர் நகரப்பகுதிகளையும், 1,515 பேர் கிராமப்பகுதிகளையும் சேர்ந்தவர்கள். இவர்கள் தகுதி நக்கம் செய்யப்பட்டதற்கான உத்தரவு பெறப்பட்ட நாளில் இருந்து 3 ஆண்டுகள் முடிவு பெறாதவர்கள் இந்த தேர்தலில் போட்டியிட முடியாது என்று தேர்தல் கமிஷன் குறிப்பிட்டுள்ளது.

வேட்பாளர்கள் தேர்தலில் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:​ ஊராட்சி வார்டு உறுப்பினர் ​ ரூ. 3750 ஊராட்சி தலைவர் ​ ரூ. 15,000 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ​ ரூ. 37,500 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ​ ரூ. 75,000 பேரூராட்சி, 3​ம் நிலை நகராட்சி தலைவர் ​ ரூ. 56,250 நகராட்சி மன்ற தலைவர்

(முதல் மற்றும் 2​ம் நிலை) ​ ரூ. 1,12,500 நகராட்சி தலைவர்:

(தேர்வுநிலை, சிறப்பு நிலை) ​ ரூ. 2,25,000 மாநகராட்சி மேயர் ​ ரூ. 5,62,500 சென்னை மாநகராட்சி மேயர் ​ ரூ.11,25,000 பேரூராட்சி 3​ம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் ​ ரூ. 11,250 நகராட்சி உறுப்பினர் (முதல் நிலை மற்றும் 2​ம் நிலை ​ ரூ. 22,500 நகராட்சி மன்ற உறுப்பினர் (தேர்வு நிலை, சிறப்பு நிலை) ​ ரூ. 56,250 மாநகராட்சி வார்டு உறுப்பினர் (சென்னை ங்கலாக)​ ரூ. 33,750 சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர் ​ ரூ. 56,250 வரையில் செலவுகள் செய்ய வரயறை நிர்நியக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago