கேரள சட்டசபை தேர்தல்:முதல்வர் அச்சுதானந்தன் போட்டியிடவில்லை

திங்கட்கிழமை, 7 மார்ச் 2011      அரசியல்
ACHUTHANANDAN

திருவனந்தபுரம்,மார்ச்.-7 - கேரளாவில் முதல்வர் அச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தை போலவே கேரளாவிலும் அடுத்த மாதம் 13 ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.  இந்நிலையில் இடது கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் சந்திரப்பன் நிருபர்களிடம் கூறியதாவது, கேரள சட்டசபை தேர்தலில் யாரையும் முன்னிறுத்தி ஓட்டு கேட்கப் போவதில்லை. குறிப்பிட்ட ஒருவரை முதல்வராக்குவோம் என்று கூறி ஓட்டு கேட்ட பின்பு அவர் தோல்வியடைந்து விட்டால் அது நடைமுறைக்கு சரியானதாக இருக்காது.
மேலும் தற்போதைய முதல்வர் அச்சுதானந்தனுக்கு வரும் தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்கப்பட மாட்டாது. ஆனால் மாநிலத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் விரும்பினால் வாய்ப்பளிக்கப்படும். அச்சுதானந்தன் சிறந்த முதல்வர்களில் ஒருவர். இருப்பினும் தேர்தலில் அவருக்கு அடுத்த கட்டத்தில் உள்ள மற்றொருவருக்கு வாய்ப்பளிப்பதையே தொண்டர்கள் அதிகம் விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: