முக்கிய செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல்: 27-ல் அனைத்து கட்சி கூட்டம்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை,செப்.24 - உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி பிரமுகர்களிடமும் வரும் 27 ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நன்னடத்தை விதிகள் முறையாகவும், முழுமையாகவும் செயல்படுத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசனை செய்து அவற்றின் கருத்துக்களை பெற மாநில தேர்தல் ஆணையம் விரும்புவதால் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த உதவும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை விவாதிக்க காவல் துறை உயர் அலுவலர்களை மாநில தேர்தல் ஆணையாளர் வரும் 26 ம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: