முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க மையம்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

சபரிமலை,செப்.24- சபரிமலை ஐயப்பன் கோயில் பகுதியில் பிளாஸ்டி பைகள்,பொருட்கள் இல்லாமல் செய்ய கோயிலுக்கு செல்லும் முக்கிய இடங்களில் சோதனை மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகத்திலேயே இல்லாத அளவுக்கு சுமார் 2 மாத காலத்தில் 3 கோடி பக்தர்கள் குவியும் இடம் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலாகும். உலகத்திலேயே பணக்கார தெய்வம் என்று அழைக்கப்படும் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்குக்கூட இந்த அளவுக்கு 2 மாத காலத்தில் பக்தர்கள் போவதில்லை. அந்த அளவுக்கு கீர்த்தி வாய்ந்தது சபரிமலை ஐயப்பன் கோயிலாகும். தமிழ் மாதத்திற்கு கார்த்திகை 1-ம் தேதி தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய 4 மாநிலங்களில் பக்தர்கள் ஐயப்பன் பேரில் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை ஐயப்பனை தரிசித்து வருவார்கள். பக்தர்கள் செல்லும்போது தாங்கள் எடுத்துச்செல்லும் உணவுப்பொருட்கள் கெட்டுவிடாமல் இருக்க பிளாஸ்டிக் பைகளில் வைத்து எடுத்துச்செல்வார்கள். தண்ணீர் பாட்டில்களும் பிளாஸ்டிக் கேனில் இருப்பதால் வேறுவழியில்லாமல் அவைகளை எடுத்துச்செல்ல வேண்டியுள்ளது. அதேசமயத்தில் பக்தர்கள் எடுத்துச்செல்லும் பிளாஸ்டிக் பைகளை கோயிலை சுற்றிலும் போடுவதால் மாசு படுகிறது. மழை காலத்தில் தண்ணீர் பூமிக்குள் இறங்காமல் வெள்ளமாக ஓடிவிடுகிறது. இதனால் சுற்றுப்புறசூழல் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்கும் வகையில் பக்தர்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் பைகளை தடுக்க முக்கிய இடங்களான பம்பை,நீலாக்கல் ஆகிய பகுதிகளில் சோதனைச்சாவடிகளை மாவட்ட நிர்வாகமும் வன இலாகாவும் சேர்ந்து அமைக்க உள்ளன. சபரிமலைக்கு போகிறவர்கள் பம்பை நதியில் நீராடிவிட்டுத்தான் செல்வார்கள். அதேமாதிரி மோட்டார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படும் நிலாக்கல். இந்த இடங்களில் பக்தர்களிடம் உள்ள பிளாஸ்டிக் பாட்டீல்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளை வாங்கிக்கொண்டு அவர்கள் எடுத்து வந்த அத்தியாவசிய பொருட்களை கோயிலுக்கு கொண்டு செல்ல துணிப்பைகள் கொடுக்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் மலைக்கு செல்லும் வழி நெடுகிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீருக்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago