முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி கைது

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, செப்.25 - தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மீனவரை கடத்தி கொலை செய்த வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தி.மு.க. ஆட்சியில் மீன் வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.பி.சாமி சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். கடந்த 2006 தி.மு.க. ஆட்சியில் மீன் வளத்துறை அமைச்சராக கே.பி.பி.சாமி நியமிக்கப்பட்டவுடன் கே.பி.பி.சாமி வசிக்கும் கே.வி.குப்பம் பகுதியில் கே.பி.பி.சாமியின் சகோதரர்கள் கே.பி.பி.சங்கர் மற்றும் கே.பி.பி.சொக்கலிங்கம் ஆகியோர் தலைமையில் ரவுடி கும்பல் புகுந்து அந்த மீனவ கிராமத்து மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பதற்காக கிராமத்தை விட்டே விரட்டினர். அதன்பிறகு சொந்த இடத்திற்கு திரும்ப முடியாமல் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தத்தளித்தனர்.

ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது என்ற தைரியத்தில் கே.பி.பி.சாமி மற்றும் அவரது சகோதரர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்து கொண்டு சொந்த மீனவ மக்களையே வதைக்கும் அளவுக்கு ஆட்டம் போட்டனர். கட்ட பஞ்சாயத்து அடிதடி தங்களுக்கு ஒத்து வராதவர்களை கடத்தி தாக்கி படுகாயப்படுத்துவது, கொல்வது என்று தொடர்ந்து இவர்களது செயலை பற்றி புகார் தெரிவித்தால் கடந்த ஆட்சியில் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்கினர்.

மீறி சொன்னவர்கள் மிரட்டப்பட்டனர். ஊரைவிட்டே ஓடும் நிலைக்கு ஆளாகினர். சாமியின் பேயாட்டத்தை எதிர்க்க முடியாத நிலை பொது தேர்தலில் தங்கள் ஆத்திரத்தை காண்பித்த மக்கள் சாமியை படுதோல்வி அடைய செய்தனர்.

இந்நிலையில் கே.பி.பி.சாமியும் அவரது சகோதரர்கள் மற்றும் அடியாட்கள் தங்களது கணவர்களை கடத்தி கொன்று விட்டதாக பிரேமாவதி என்ற பெண் கடந்த மாதம் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருந்தார். இதேபோல் வேலு என்பவரின் மனைவியும் தனது கணவரை கே.பி.பி.சாமியின் தம்பிகள் கே.பி.பி.சங்கர், கே.பி.பி.சொக்கலிங்கம் மற்றும் டைடன் (எ) யோபுகுமார், சுந்தரம், டில்லிபாபு, வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் சாமியின் தூண்டுதலின் பேரில் சுனாமி நிதியை கே.பி.பி.சங்கர் முறைகேடாக கையகப்படுத்தியதை தட்டி கேட்டதற்காக வீட்டில் இருந்து கடத்தி சென்று கொலை செய்ததாக புகார் அளித்திருந்தனர். வீட்டிலிருந்த தங்கள் கணவன்மார்களை சாமியின் அடியாட்கள் 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அழைத்து சென்றதாகவும் அதன்பிறகு எங்கு தேடியும் தனது கணவர்கள் கிடைக்கவில்லை என்றும் இதனிடையே தனது கணவரை சாமியின் ஆட்கள் மற்றும் தம்பிகள் தாக்கி கடலில் தூக்கி வீசியதை பார்த்ததாக சிலபேர் சொன்னதாக குறிப்பிட்டு தனிதனியே கமிஷனர் திரிபாதியிடம், செல்லதுறை மற்றும் வேலுவின் மனைவி இருவரும் புகார் அளித்திருந்தனர்.

இது சம்பந்தமாக புகாரை கொலை வழக்கை பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்தவுடன் கே.பி.பி.சங்கர், சுந்தரம் (எ) சுந்தரமூர்த்தி, யோபு (எ) முறையரசு, டில்லிபாபு, வைத்தியலிங்கம் ஆகியோர் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

குமார், யோபு (எ) டைசன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் டைகன் யோபு இருவரும் சிறுவர்கள் என்பதால் சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே கடந்த மாதமே கே.பி.பி.சாமி கைதாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. போலீசார் இது பற்றி கே.பி.பி.சாமியின் தம்பிகள் மற்றும் குற்றவாளிகளிடம் வாக்குமூலம் பெற்றனர்.

கே.பி.பி.சாமியிடமும் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கே.பி.பி.சாமி முன்ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர். அதன் மீதான விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தனர்.இதனிடையே நேற்று காலை 10.30 மணி அளவில் திருவொற்றியூர் துணை ஆணையர் அவினாஷ்குமார் தலைமையில் உதவி ஆணையர் சங்கரலிங்கம் மற்றும் போலீசார் கே.பி.பி.சாமியை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர். சாமி கைது செய்வதையொட்டி தி.மு.க.வினர் சாமி வீட்டருகே திரண்டு இருந்தனர். போலீசாரும் பாதுகாப்புக்கு நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டிருந்தனர்.

சாமியை கைது செய்த போலீசார் திருவொற்றியூர் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கே.பி.பி.சாமி கொடுத்த வாக்கு மூலத்தில் மேலும் 3 வழக்குகளில் சம்மபந்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கே.பி.பி.சாமி ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர். பின்பு கே.பி.பி.சாமியை நேற்று மாலை 3 மணியளவில் பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ராஜேஸ்வரி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஸ்வரி வருகின்ற 3 ம் தேதி வரை கே.பி.பி.சாமியை விசாரணை கைதியாக புழல் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.  அதன்படி போலீசார் புழல் சிறையில் அவரை அடைத்தனர்.

கே.பி.பி.சாமி கைது பற்றி அங்குள்ள மீனவர்கள் பேசும்போது மீனவர் இனத்தில் வளர்ந்து அமைச்சராக வந்தவர் மீனவர் நலனுக்கு பாடுபடுவார் என்று சந்தோஷப்பட்டால் மீனவர் இனத்தையே அழிக்கும் செயலில் ஈடுபட்டார். இப்போது அனுபவிக்கிறார் என்று சந்தோஷத்துடன் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago