முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வருக்கு பாராட்டு: இளைஞர்கள் பாசறை தீர்மானம்

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை செப், 25 - ஏழை எளிய தாய்மார்கள் மற்றும் விவசாயிகளுக்கு விலையில்லா ஆடு, மாடுகளை வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இளைஞர்கள்,  இளம் பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டத்தில் பாரட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் அ.தி.மு.க. தலைமை நிலையத்தில் நடைபெற்ற இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டத்திற்கு பாசறை மாநில செயலாளர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.  

இளம்பெண்கள் பாசறை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக  அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் விசாலாட்சி நெடுஞ்செறியன், ஈ.வி.கே. சுலோசனா சம்பத், அகில இந்திய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன்,  அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் தம்பிதுறை எம்.பி. ஆதிராஜாராம், ராஜலட்சுமி எம்.எல்.ஏ.  மற்றும் மாநில - மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனார்.

கூட்டத்தில் இளைஞர்கள் இளம் பெண்கள் பாசறையின் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் யாவரும் திரளாக கலந்து கொண்டனார்.

அ.தி.மு.க.  இளைஞர் பாசறை - இளம்பெண்கள் பாசறை மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசணை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

முதல்வர் ஜெயலலிதாவின் எல்லையற்ற அறிவும் ஆற்றலும் தமிழ்நாட்டிற்கு மட்டுமே பயன்படாமல் இந்திய திருநாடு முழுமைக்கும் பயன்பெறும் வகையில் கூடிய விரைவில் ஜெயலலிதா அவர்கள் இந்திய திருநாட்டின் பிரதமர் நாற்காலியில் அமர்வதற்கு இளைஞர்கள் - இளம்பெண்கள் பாசறை அயராது உழைப்போம் என உறுதி ஏற்போம்.

தமிழகத்தில் ஏகபோக குடும்ப ஆட்சி நடத்தி வந்த கோபாலபுரத்து கோமாளியும் அவரது மைனாரிட்டி தி.மு.க ஆட்சியையும் வீழ்த்திகாட்டி தமிழக மக்களை மிகப்பெறும் துயரத்தில் இருந்து காப்பாற்றி இருள் படிந்துகிடந்த அவர்களது வாழ்வில் நம்பிக்கை ஒளியோற்றி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு இக்கூட்டத்தின் மூலம் பணிவோடு பாராட்டி, வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் இளைஞர் பாசறை - இளம்பெண்கள் பாசறை கடுமையாக உழத்து அனைத்து இடங்களிலும் வெற்றிவாகை சுட பாடுபடுவோம் என்று உறுதி ஏற்ப்போம்.

முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முதல் திட்டமாக பாமரர் முதல் படித்தவர் வரை யாவரும் பயன்பெறும் வகையில் மக்களின் மனத்துயரமெல்லாம் நீங்கும் வகையில் 7 கோப்புகளில் கையெழுத்திட்டு உடனடியாக அரசானையை நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவை உளம் கனிந்த நன்றியோடு இக்கூட்டம் பாராட்டுகின்றது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் மக்கள் வரிப்பணத்தை தண்ணீராக செலவு செய்து தலைமை செயலகம் என்ற பெயரில் கட்டிய கட்டிடத்தை,  சிறப்போடு சீரமைத்து டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையை போல ஏழை எளிய பாமரமக்கள் சிகிச்சை பெறும் வகையில் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாக செயல்படும் என அறிவித்த முதல்வருக்கு இக்கூட்டம் பாராட்டு தெருவிக்கின்றது.

கடந்த மாதம் அமெரிக்கா ஏகாதிபத்திய வல்லரசு நாட்டின் அதிபர் ஹில்லாரி கிளின்டன் சந்தித்து வாழ்த்து கூறியதையும் தமிழர் நலனே தன் நலன் என்று கருதி அதற்காக தமிழ் நாட்டிலேயே எந்த தலைவருக்கும் இல்லாத மிகுந்த துணிச்சலுடன் தமிழக சட்டமன்றத்திலே போர்க்குற்றவாளி ராஜபக்ஷேவுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவை பெருமையோடு இக்கூட்டம் பாராட்டுகின்றது.

ஏழை எளிய மாணவர்கள் ,அரசு சார்ந்த பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கல்வியில் சிறந்து விளங்க கனவில் மட்டுமே நினைத்திருந்த மடிக்கணிணியை விலையில்லா பொருளாக வழங்கி மாணவ மாணவியர் அவர்களது வாழ்வில் அறிவு ஒளியேற்றிய ஜெயலலிதா இக்கூட்டம் பணிவுடன் பாராட்டுகின்றது.

தங்கத்தின் விலை உயர்ந்துக் கொண்டே போனதால் தமிழகத்தில் வாழும் ஏழை பெண்களுக்கு திருமணம் என்பதே எட்டா கனியாக இருந்துவந்த சூழ்நிலையை உணர்ந்த முதல்வர் அம்மா அவர்கள் ஏழை பெண்களுக்கு 4 கிராம் தாலிக்கு தங்கமும், ரூ.50,000/- பணமும்  தந்து அவர்களது வாழ்வில் ஒளியேற்றியும், கிராமத்தில் வாழும் ஏழை விவசாயிகள், தாய்மார்கள் கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்யும் வகையில் விலையில்லா ஆடு, மாடுகளை வழங்கி அதில் வரும் வருமானங்களை பெற்று அவர்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்து தமிழகம் முழுவதும் உள்ள பட்டிதொட்டிகளில் எல்லாம், விலையில்லா ஆடு, மாடுகளை வழங்கிவருகின்ற முதல்வர் ஜெயலலிதாவிற்கு மனமார்ந்த நன்றியோடு இளைஜர் பாசறை - இளம்பெண்கள் பாசறை பணிவோடு பாராட்டு தெரிவிக்கின்றது.

 இவ்வாறு மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago