முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூரில் பட்டப்பகலில் ரூ.10 கோடி நகை-பணம் கொள்ளை

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருப்பூர், செப். 25 - திருப்பூரில் நேற்று தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 10 கோடி நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த துணிகர சம்பவத்தில் ஈடுப ட்ட ஆசாமிகள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பிரபல முத்தூட் தனியார் நிதி நிறுவனம் நாடு முழுவதும் ஏராளமான கிளைகளைக் கொண்டுள்ளது. சில நிமிடங்களில் தங்க நகைக்கு கடன் வழங்குவதால் ஏராளமான வாடிக்கையாளர்களையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது. திருப்பூரின் மையப் பகுதியில் உள்ள முத்தூட் கிளையிலும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் நகையை அடகு வைத்து பணம் பெற்று உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை சுமார் 10 மணியளவில் இந்த வங் கி கிளைக்குள் நுழைந்த மர்ம ஆசாமிகள் சிலர் மிளகாய் பொடியை ஊழியர்கள் மீது வீசினர். 

இதில் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சுதாரிப்பதற்குள் அனைவரையும் பிடித்து கட்டிப் போட்டனர். பின்னர் மேனேஜரிடம் இருந்த லாக்கர் சாவியை கைப்பற்றி அங்கு பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ. 10 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பிச் சென்று விட்டனர். 

கொள்ளை கும்பல் பயங்கர ஆயுதங்களையும் கொண்டு வந்திருந்த தாகத் தெரிகின்றது. அவர்கள் தப்பிச் சென்ற பின்னர் இது குறித்து வங்கி ஊழியர்கள் போலீசில் புகார் செய்தனர். 

திருப்பூர் எஸ். பி. தலைமையில், விரைந்து வந்த போலீசார் இந்த கொள்ளை சம்பவம் குறித்து  விசாரணை நடத்தினர். நகை, பணத்துடன் தப்பிச் சென்ற கொள்ளை கும்பலை மடக்கிப் பிடிக்க போலீசார் வலை வீசியுள்ளனர். 

இந்தக் கொள்ளை சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொள்ளை நடந்துள்ள கிளையில் நகைகளை அடமானம் வைத்துள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்