முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, செப். 25 - சென்னையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் கடைசி ஓவரில் மலிங்காவின் அபார ஆட்டத்தால் மும்பை அணி வெற்றி கண்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிர்ச்சி தோல்வி அட் போட்டியின் 2வது நாளான நேற்று சென்னையில் 2 போட்டிகள் நடைபெற்றன.   ஙூஏ பிரிவு அணிகளுக்கான இதில் ஒரு முக்கியமான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இரவு 8 மணிக்கு துவங்கிய இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, முதலில் பேட்டிங் செய்வதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக மைக்கேல் ஹசியும், முரளி விஜயும் களம் இறங்கினர். எதிரணியில் இருந்து மலிங்கா முதல் ஓவரை வீசி துவக்கினார். இவர் 5வது ஓவரை மீண்டும் வீசியபோது விஜய் கிளீன் போல்டானார். முதல் விக்கெட்டாக விஜயை சென்னை அணி இழந்த போது 28  ரன்கள் பெற்றிருந்தது. 

இதன்பிறகு ஹசியுடன், சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியின் ஸ்கோரை அரை சதத்திற்கு உயர்த்தி, 63 ரன்களுக்கு உயர்ந்தபோது சுரேஷ் ரெய்னா பொல்லார்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பத்ரிநாத் 16 ரன்கள் பெற்று ஆட்டமிழக்க, ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய ஹசியுடன், அணியின் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். தோனி அதிரடியாக விளையாடி 13 பந்துகளை மட்டும் சந்தித்து அதில் 22 ரன்களை பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார்.  முன்னதாக 81  ரன்களுக்கு உயர்ந்த ஹசி, அணியின் ஸ்கோர் 144 ரன்களுக்கு  உயர்ந்த போது ஆட்டமிழந்தார். ஹசி 57 பந்துகளில் 3 அபார சிக்சர்களை விளாசியும், 8 பவுண்டரிகளை வெளுத்தும் ரசிகர்களை குதூகலப்படுத்தினார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை  எடுத்தது.

அடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. 

இதன் துவக்க ஆட்டக்காரர்களாக இறங்கியவர்களில் ஜேக்கப்ஸ் 18 ரன்களும், பிளிசார்ட் 28 ரன்களும் பெற்றுதந்தனர். அடுத்து வந்த சுமன், ராயுடு, சைமண்ட்ஸ் ஆகியோர் மிக சொற்பமான ரன்களிலேயே அவுட்டானார்கள். 

துவக்க ஆட்டக்காரர்களும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் அவுட்டாகிவிட்ட நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்களை எட்டுவதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. பேட்ஸ்மேன்கள் கைவிட்டநிலையில், பவுலர்களான ஹர்பஜன் சிங்கும், மலிங்காவும் ஜோடி சேர்ந்து முடிந்த மட்டும் மோதிப்பார்ப்போம் என்ற பாணியில் அதரடி தாக்குதல்கள் நடத்தினர். இவர்கள் பார்ட்னர்ஷிப்பாக அரை சதத்திற்கும் மேல் குவித்தனர்.

கடைசி ஓவரை போலிஞ்சர் வீச, அதில் மட்டும் இந்த அணி வெற்றி பெற்ற 13 ரன்கள் தேவை என்ற நிலையில் மலிங்கா அபாரமாக விளையாடி 2 பவுண்டரிகள் அடித்து இறுக்கத்தை அதிகரித்தார். கடைசி 2 பந்துகளில் 1 ரன் தேவை என்ற நிலையில் எளிதில் அடித்து மும்பை அணியை வெற்றிக்கு கொண்டுசென்றார்.  1 பந்து கைவசம் இருந்த நிலையில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி கண்டது. 

கடைசி சில ஓவர்கள்  வரை வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த சென்னை சூப்பர்கிங்ஸ் அணி, கடைசியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 

மும்பை அணியில் ஹர்பஜன் சிங் ஆட்டமிழக்காமல் 19 ரன்களும், மலிங்கா ஆட்டமிழக்காமல் 37 ரன்களும் பெற்றுத்தந்தனர். மலிங்கா 18 பந்துகளில் 3 அபார சிக்சர்கள் விளாசியும், 3 பவுண்டரிகள் அடித்தும் ரன் வேட்டையாடியது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக நடந்த முதல் ஆட்டத்தில் கேப் கோப்ராஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூ சவுத்வேல்ஸ் அணியை தோற்கடித்தது. டாசில் வென்ற நியூ சவுத்வேல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது. இந்த அணிக்கு வாட்சன் மட்டும் அதிகபட்சமாக 34 ரன்கள் பெற்றுத்தர, ஸ்மித் 24 ரன்களும், வார்னர் 20 ரன்களும் பெற்று அவுட்டானார்கள். 

136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட களம் இறங்கிய கேப் கோப்ராஸ் அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. கோப்ராஸ் அணிக்கு கிப்ஸ் 55 ரன்களும், லெவி 43 ரன்களும் பெற்றுத்தந்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்