முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலஸ்தீனம் தனி நாடு என்பதில்உறுதி: இந்தியா

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க்,செப்.25 - பாலஸ்தீனம் தனி நாடு என்பதில் இந்தியாவின் நிலை உறுதியானது. இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று இந்தியா தெளிவாக தெரிவித்துள்ளது. மேற்காசியாவில் கோலன் குன்றுகள், மேற்குகரை பகுவருகிதி உள்ளடங்கிய பகுதி பாலஸ்தீனம் என்பதில் எந்தவித சந்தேகம் இல்லை. பாலஸ்தீனம் தனி நாடு என்பது ஏற்கனவே தெளிவாக அமைந்துவிட்டது. இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று நேற்று நியூயார்க் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனம் நாட்டிற்கு உறுப்பினர் அந்தஸ்து கொடுப்பதற்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்து றது. அதேசமயத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றினார். இதுகுறித்து நேற்று மத்தாயிடம் நிருபர்கள் கேட்டதற்கு மேற்கண்டவாறு கூறினார். 

தனிபாலஸ்தீன நாட்டிற்கு கடந்த 1988-ம் ஆண்டிற்கு முன்பே இந்தியா அங்கீகாரம் வழங்கிவிட்டது. அதனால் இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை என்றும் மத்தாய் தெளிவாக கூறினார். பெத்லகேம் நகரில் ஏசு பிறந்தார் என்றும் கோலன் குன்று பகுதியில்  மக்களிடம் அவர் உரையாற்றி மீன் துண்டுகளை பரிமாறுவதில் பெரும் அற்புதத்தை ஏற்படுத்தினார் என்று கூறி அந்த பகுதிகளை இஸ்ரேல் உரிமை கொண்டாடி வருகிறது. அதற்கு அமெரிக்காவும் ஆதரவு கொடுத்து வருகிறது தனி பாலஸ்தீனம் நாடு உருவாகுவதில் யாசர் அராபத் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்