முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரியர்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், செப். 25 - சாம்பியன்ஸ் லீக் 20 -க்கு 20 போட்டியில் பெங்களூரில் நடந்த முதல் லீக் ஆட்டத்தில், வாரியர்ஸ் அணி பரபரப்பான ஆட்டத்தில் 3 விக்கெ ட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் வாரியர்ஸ் அணி தரப்பில், துவக்க வீரர் பிரின்ஸ் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கேப்டன் போத்தா அவருக்கு பக்கபலமாக ஆடினார். முன்னதாக பெளலிங்கின் போது, முன்னணி வேகப் பந்து வீச்சாள ரான தியாரன் 4 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினார். பர்னெல், போத்தா, போஜே மற்றும் சாட்சோபே ஆகியோர் அவருக்கு ஆதர வாக பந்து வீசினர். 

சாம்பியன்ஸ் லீக் 20 -க்கு 20 முக்கிய போட்டியின் முதல் லீக் ஆட்டம் பெங்களூரில் உள்ள சின்னசாமி அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் வாரியர்ஸ் அணிகள் மோதின. 

இதில் டாசில் வெற்றி பெற்ற வாரியர்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செ ய்தது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சார்பில் அதிரடி வீரர் கிறி ஸ் கெய்ல் மற்றும் அகர்வால் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

முதலில் களம் இறங்கிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு, 172 ரன்னை எடுத்தது. அந்த அணி வீரர்களில் 4 பேர் கால் சதம் அடித்தனர். 

விராட் கோக்லி அதிகபட்சமாக, 29 பந்தில் 34 ரன்னை எடுத்தார். இதி ல் 4 பவுண்டரி அடக்கம். டிவில்லியர்ஸ் 25  பந்தில் 31 ரன்னை எடுத் தார். தவிர, எஸ். திவாரி 15 பந்தில் 28 ரன்னையும், மொகமது கைப் 20 பந்தில் 26 ரன்னையும், கெய்ல் 14 பந்தில் 23 ரன்னையும் எடுத்தனர். 

வாரியர்ஸ் அணி தரப்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான தியாரன் 29 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். தவிர, பர்னெல், போத்தா, போஜே மற்றும் சாட்சோபே ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

வாரியர்ஸ் அணி 173 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பெங்களூர் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்னை எடுத்தது. 

இதன் மூலம் அந்த அணி கடைசி பந்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற வாரியர்ஸ் அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

வாரியர்ஸ் அணி சார்பில், துவக்க வீரர் பிரின்ஸ் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென் றார். கேப்டன் போத்தா அவருக்கு நல்ல கம்பெனி கொடுத்தார். 

பிரின்ஸ் அதிகபட்சமாக, 55 பந்தில் 74 ரன்னை எடுத்தார். இதில் 6 பவு ண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். கேப்டன் போத்தா 24 பந்தில் 42 ரன் னை எடுத்தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். 

பெங்களூர் அணி தரப்பில், மிதுன் 25 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். வெட்டோரி, மற்றும் அரவிந்த் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். மொகமது ஒரு விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக பிரின்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்