முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருகம்பாக்கத்தில் கி.வீரமணி பொதுக்கூட்டத்தில் மோதல்​கல்வீச்சு;

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். - 26 - விருகம்பாக்கம் மார்க்கெட் அருகே காளியம்மன் கோவில் தெருவில் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரின் 133​வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.   8.30 மணி அளவில் சுப.வீரபாண்டியன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மேடையில் ஒரு கல் வந்து விழுந்தது. இதனால் வீரமணி உள்ளிட்ட தி.க. நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கல்வந்த திசை நோக்கி தி.க. தொண்டர்கள் 10 பேர் சென்று பார்த்தனர். அங்கு யாரும் இல்லை. பின்னர் சிறிது நேரம் கூட்டம் அமைதியாக நடந்தது. சுப.வீரபாண்டியன் பேசிவிட்டு அமர்ந்ததும், கி.வீரமணி பேசத் தொடங்கினார். அவர் பேசிக் கொண்டிருந்த போது திடீரென வன்முறை மூண்டது.   இந்து முன்னணியை சேர்ந்த 20 பேர் மேடை அருகே கட்டப்பட்டிருந்த டியூப்லைட்டுகளை அடித்து உடைத்தனர். திராவிடர் கழகத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடியே மேடையை நோக்கி அவர்கள் முன்னேறினர். திராவிடர் கழகத்தினரும் எதிர் தாக்குதலுக்கு தயாரானார்கள்.   இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட் டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இந்து முன்னணியினரை விரட்டியடித்தனர். 

இந்த கல்வீச்சு மற்றும் மோதலில் இந்து முன்னணியை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் காயம் அடைந்தார். போலீசாரின் தலையீட்டால் நிலைமை சீரானது, வீரமணி பேசி முடித்தார்.   இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் வட பழனி உதவி கமிஷனர் சீனிவாசன், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகள் செந்தில், இளங்கோ, லிட்டில், தயாளன், நாகேந்திரன், இன்னொரு செந்தில் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். தி.க. தரப்பில் தமிழ், ஏழுமலை, நடராஜன், அரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago