முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவையில் அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வேலுமணி தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

கோவை, செப்.- 26 - கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி அறிமுகப்படுத்தப்பட்டார். கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் கூட்டம் நேற்று காலை இதய தெய்வம் மாளிகையில் நடந்தது. கூட்டத்திற்கு கோவை புறநகர் மாவட்ட செயலாளரும் தமிழக தொழில்த்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்தார். கோவை மாநகர் மாவட்ட செயலாளர் தா.மலரவன் எம்.எல்.ஏ., மாநில அண்ணா தொழில் சங்க பேரவை செயலாளர் ஆர்.சின்னச்சாமி எம்.எல்.ஏ மற்றும் சேலஞ்சர்துரை எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ப.வெ.தாமோதிரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதை தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளரும் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா கோவை மாநகராட்சி அ.தி.மு.க மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செ.ம.வேலுச்சாமியை அறிமுக கூட்டத்தில் அறிமுகப் படுத்தப்பட்டது. அவருக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தினர்.

மேலும் கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் போட்டியிடும் ஒவ்வொரு கவுன்சிலர் வேட்பாளர்களும் அறிமுக கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

நடைபெற்ற அறிமுக கூட்டத்தில் பொள்ளாச்சி நாடளுமன்ற உறுப்பினர் சுகுமார் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் முத்துகருப்பண்ணசாமி, கிணத்துக்கடவு எம்.எல்.ஏ தாமோதிரன் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., ஓ.கே.சின்னராஜ் முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி.ராஜீ அவைத்தலைவர் ஏ.கே.செல்வராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்