முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்திரராஜன் சிறுநீரக பாதிப்பால் அனுமதி

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை,செப்.- 26 - பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்திரராஜனுக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சென்னை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  சென்னை மந்தவெளி மேற்கு வட்டார தெருவில் வசித்து வருபவர் மதுரை டி.எம். சவுந்திரராஜன். பிரபல பின்னணி பாடகரான இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகிய இருவருக்கும் ஏராளமான பாடல்களை பாடியவர். இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் மறைந்த கவிஞர் கண்ணதாசன் பல பாடல்களை எழுதியுள்ளார். அவற்றை ஏற்ற இறக்கத்துடன் சிறப்பாக பெருமைப்பட செய்தவர் டி.எம். சவுந்திரராஜன். இவர் ஏராளமான பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். 

மறைந்த நடிகர்கள் ரவிச்சந்திரன், ஜெமினி கணேசன் ஆகியோருக்கும் பின்னணி பாடிய டி.எம். சவுந்திரராஜன் அடுத்த தலைமுறை நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோருக்கும் பாடியுள்ளார். அவருக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடே அவரது உறவினர்கள் அவரை ஆர்.ஏ. புரத்தில் உள்ள காளியப்பா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை சோதித்த மருத்துவர்கள் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்