முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சிகளுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னையில், செப். - 26 - உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் பற்றி அனைத்து  அரசியல் கட்சிகளுடன் தேர்தல் கமிஷன் நாளை 27-ந்தேதி சென்னையில் ஆலோசனை நடத்துகிறது. 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல்  தமிழ் நாட்டில் உள்ளாட்சி தேர்தல்கள் அடுத்த மாதம் (அக்டோபர் ) 17 மற்றும் 19 ஆகிய 2நாட்கள் 2கட்டமாக நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதி முறைகள் பற்றி அனைத்துக்கட்சிகளுடனும்,  தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுடனும் தேர்தல் கமிஷன்  ஆலோசனை நடத்த முடிவு செய்து உள்ளது.  இதுபற்றி தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சுதந்திரமாக நடத்த  தமிழ்நாட்டில், உள்ளாட்சி தேர்தல்கள் 17-10-2011மற்றும் 19-10-2011 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.  இது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. உள்ளாட்சி தேர்தல்கள் சுமூகமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதோடு வாக்காளர்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்க மாநிலத் தேர்தல் ஆணையம் அனைத்துவித நடவடிக்கைளையும் எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் இந்த தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் முறையாக, முழுமையாக செயல்படுத்துவது தொடர்பாக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்து அக்கட்சிகளின் கருத்துக்களை பெறமாநிலத் தேர்தல் ஆணையம் விரும்புகிறது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் நாளை 27.9.2011 அன்று மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு தேர்தல் சிறப்பாக நடத்திட தங்களது ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிகளை செம்மையாக நடைமுறைப்படுத்திட மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.

நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற வேண்டுமென மாநிலத் தேர்தல் ஆணையம் உறுதி பூண்டுள்ளது.  இதை நிறைவேற்றும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க இன்று 26-ந்தேதி  காவல்துறை உயர் அலுவலர்களுடனான கூட்டம் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையரால் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்