முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை மேலும் சரிவு பவுனுக்கு ரூ.656 குறைந்தது

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,செப்.- 27 -  சென்னையில் நேற்று தங்கம் விலை மேலும் ரூ656 குறைந்தது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்தை  நெருங்கியது. இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்ததை தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழைமை ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 920 -விற்கு விற்றது. மறுநாள் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.688 குறைந்து. ரூ.20 ஆயிரத்து 232 ஆக இருந்தது. நேற்று பவுனுக்கு மேலும் ரூ.656 குறைந்தது. ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 576 ஆக விற்கிறது. ஒரு கிராம் ரூ.2447 ஆக உள்ளது. கடந்த 2 நாளில் மட்டும் ரூ.1344 குறைந்துள்ளது. இது மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. தங்கம் விலை குறைவுக்கு அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதே காரணம் என்று கூறப்படுகிறது. தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளியும் விலை குறைந்துள்ளது. நேற்று ஒரு கிலோ ரூ.49 ஆயிரத்து 995 ஆகவும், ஒரு கிராம் ரூ.53.50 ஆகவும் உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்